காலமானார் கர்நாடகாவின் சிற்பி.. எஸ்.எம். கிருஷ்ணா மறைவு..! தலைவர்கள் இரங்கல்

கர்நாடாக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 92. பெங்களுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில…

SM Krishna

கர்நாடாக மாநிலத்தின் முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணா வயது மூப்பால் காலமானார். அவருக்கு வயது 92. பெங்களுரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாவே உடல் நலக்குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டிலேயே தங்கிச் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால் இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

காங்கிரஸ் இயக்கத்தினைச் சேர்ந்த எஸ்.எம். கிருஷ்ணா கர்நாடாக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் சோமனஹள்ளியில் கடந்த 1932 மே 1ம் தேதி பிறந்தார். தனது கல்வியை மைசூரிலும், பின் சட்டக் கல்வியை பெங்களுரிலும் முடித்த எஸ்.எம்.கிருஷ்ணா அரசியல் ஆர்வம் ஏற்பட்டு மாண்டியா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். சபாநாயகர், 1999-ல் கர்நாடகாவின் 10-வது முதல்வர் என அடுத்தடுத்து பதவிகளை வகித்தார்.

இவரது காலத்தில்தான் பெங்களுரு ஐடி துறையின் ஹப் ஆக மாறியது. ஏராளமான தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்டு பெங்களுரை ஹைடெக் சிட்டியாக மாற்றினார். இதனால் இவர் கர்நாடாகவின் சிற்பி என அழைக்கப்படுகிறார். அதன்பின் மகாராஷ்டிரா கவர்னராகவும், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

சுற்றி சுற்றி அடித்த சோகம்… வயநாடு நிலச்சரிவில் ஒட்டுமொத்த குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை கொடுத்த கேரள அரசு…

தன்னுடைய இறுதிக் காலங்களில் பிஜேபி-யில் இணைந்தார். மத்திய அரசு இவருக்கு கடந்த ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாளை இவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.