இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஏராளமாக பர்சனல் லோன் கொடுப்பதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ. மிஸ்டு கால் கொடுத்தால் போதும், தேடி வந்து பர்சனல் லோன் கொடுப்போம் என்று அறிவித்துள்ளது.
இந்தியாவின் நம்பகத்தன்மை உள்ள வங்கிகளில் ஒன்றான எஸ்பிஐ வங்கியில் பர்சனல் லோன் வாங்குவது பாதுகாப்பானது என்றும், அச்சுறுத்தலுக்கு இடமளிக்காத வகையில் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
திருமணம், மருத்துவம், சுற்றுலா உள்பட எந்த ஒரு தனிப்பட்ட தேவைக்கும் SBI வங்கியில் பர்சனல் லோன் வாங்கிக் கொள்ளலாம் என்றும், சொத்து மற்றும் எந்தவித உத்திரவாதமும் இல்லாமல் எஸ்பிஐ வங்கி இந்த கடனை எளிய செயல்முறை மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு ஆன்லைனில் அல்லது நேரடியாக வங்கி கிளைக்கு சென்று பர்சனல் லோன் வாங்க வேண்டும் என்ற நிலையில், தற்போது, வாடிக்கையாளர் மிஸ்டு கால் கொடுத்தாலே போதும், உடனடியாக எஸ்பிஐ வங்கி பிரதிநிதி உங்களை தொடர்பு கொண்டு பர்சனல் லோன் குறித்த விவரங்களை கூறுவார்.
10.5 வட்டி, ஆறு ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் ஆகிய பலன்கள் உள்ள நிலையில் இந்த லோனை வாங்குவது பாதுகாப்பானது என்றும், செயலிகளில் லோன் வாங்கி அச்சுறுத்தலுக்கு உள்ளாவதைவிட பாதுகாப்பான நம்பகத்தன்மை உள்ள வங்கியில் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்து பர்சனல் லோன் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எஸ்பிஐ வங்கியில் பர்சனல் லோன் வாங்குவதற்கு குறைந்தபட்சம் மாத வருமானம் 15 ஆயிரம் இருக்க வேண்டும் என்றும், கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தில் இரண்டு வருடம் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும் என்றும் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.