தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக புகழின் உச்சியில் இருந்தவர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தமிழ் சினிமாவில் பணியாற்றியா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அதன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஜய்.
பின்னர் தனது 17ஆவது வயது தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான விஜய் 1990களில் குடும்பக்கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு சமூக நீதி கருத்துக்கள் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
பிறகு கமர்சியல் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தார் விஜய். இவரது படம் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். என்னதான் புகழின் உச்சியில் வந்த போதும் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
தற்போது தளபதி 69 என்ற தனது இறுதியான படத்தில் நடித்துவிட்டு அதற்குப் பிறகு முழுநேர அரசியல்வாதியாக மாற போவதாக அறிவித்தார். சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆதவ் அர்ஜூனா மற்றும் விகடன் இணைந்து nadathiya அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.
இந்த நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா விஜய்க்கு ஆதரவாக பேசியது பரபரப்பாக பேசப்பட்டது. ஆதவ் அர்ஜுனா மிகப்பெரிய செல்வந்தர் ஆவார். இது பற்றி இயக்குனர் அமீர் விஜய்க்கு ஒரு அட்வைஸை கொடுத்திருக்கிறார். அது என்னவென்றால் செல்வந்தர்களின் அரசியல் பிரவேசம் மக்களுக்கு என்றும் நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜயின் அரசியலுக்கு நல்லதல்ல என்று கூறியிருக்கிறார் இயக்குனர் அமீர்.