திரையுலகின் இன்றைய ஹாட் டாபிக் புஷ்பா 2 திரைப்படம் தான். இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவும் செய்யாத சாதனைகளைச் செய்திருக்கிறது. மேலும் கலெக்ஷனில் முன்னணி இந்திய நட்சத்திரங்கள் அனைவரின் படங்களையும் ஓவர் டேக் செய்து ஜெட் வேகத்தில் வசூல் மழை பொலிந்து கொண்டிருக்கிறது. கடந்த வியாழன்று வெளியான புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே முன்பதில் 100 வசூல் சாதனையை நிகழ்த்தியிருந்தது. இதுவே இந்திய சினிமா வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையாகும்.
இந்நிலையில் படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் காட்சிகளைப் பார்கக் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகமெங்கும் சுமார் 12000 தியேட்டர்களில் 6 மொழிகளில் புஷ்பா 2 தி ரூல் வெளியாகி இருந்தது.
ஏற்கனவே பாடல்கள் மற்றும் பஞ்ச் வசனங்கள் பிரபலமாகி வரும் நிலையில் வசூலிலிலும் புஷ்பா 2 ரூல் செய்கிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் இப்படம் சுமார் 800 கோடியை வசூலித்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ரூ. 200 கோடி வீதம் வசூல் செய்துள்ளது புஷ்பா 2 தி ருல் திரைப்படம்.
வணங்கான் இசை வெளியீட்டு விழா.. அதோட இன்னொரு முக்கியமான சிறப்பும் இருக்கு.. என்னான்னு தெரியுமா?
இன்றோ அல்லது நாளையோ 1000 கோடி வசூலை எளிதாகத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னனி நட்சத்திரங்கள் நடித்த படங்கள் கூட இவ்வளவு சீக்கிரம் 1000 கோடியைத் தொட்டதில்லை. கடைசியாக ஜவான் திரைப்படம் 1000 கோடியைக் கடந்து சாதனை படைத்திருந்தது.
இச்சாதனையை புஷ்பா 2 தி ரூல் இந்த வாரத்தில் முறியடிக்கும் என எதிர்பார்க்கலாம். 1000 கோடியை புஷ்பா 2 கடக்குமாயின் இதுவரை எந்த ஒரு இந்திய நடிகரின் படங்களும் செய்யாத சாதனையை அல்லு அர்ஜுன் நிகழ்த்தியிருப்பார்.
புஷ்பா 2 படத்திற்காக அல்லு அர்ஜுன் சுமார் 300 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா தி ரைஸ் படமும வசூலை வாரிக் குவித்த நிலையில் புஷ்பா 2 திரைப்படமும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளதால் படக்குழுவினர் மிக மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் தியேட்டர் அதிபர்களும் நல்ல லாபம் பார்த்துள்ளனர். இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக அல்லு அர்ஜுன் உயர்ந்திருக்கிறார்.