90‘s கிட்ஸ் இளைஞர்களை வசியம் செய்த குரல்.. மாயக்குரலோன் ரஞ்சித் பாடிய பாடல்களா இது?

By John A

Published:

2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் ரஜினி, கமல் ஆகியோரின் தலைமுறை முடிந்து விஜய், அஜீத், விக்ரம், சூர்யா என அடுத்த தலைமுறை நடிகர்கள் திரும்பிய பக்கமெல்லாம் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தனர். அடுத்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகமாகியது தனுஷ், ஜெயம் ரவி, ஷாம், ஸ்ரீ காந்த், சிம்பு ஆகியோரும் வளர்ச்சி அடையத் தொடங்கினர். இவர்கள் அனைவருக்குமே ஒரு பாடல்கள் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியது. ஏனெனில் அப்போது டேப்ரிக்கார்டர்கள் மறைந்து சிடி பிளேயர்கள் வளர்ந்த நேரம்.

இதனால் இசையின் போக்கும் மாறியது. பாடகர்களும் பெருகினர். அதில் தனித்துவமாக தென்னிந்திய மொழிகளில் குறிப்பாக தமிழில் நிறைய ஹிட் பாடல்களைப் பாடியவர்தான் பாடகர் ரஞ்சித். இப்போது எப்படி சூப்பர் சிங்கர், சரிகமபதநி போன்ற நிகழ்ச்சிகள் இளம் பாடகர்களை உருவாக்குகிறதோ அதேபோல் சன்டிவியில் ஒளிபரப்பான சப்தஸ்வரங்கள், பாட்டுக்குப் பாட்டு போன்ற நிகழ்ச்சிகள் ஏராளமான பாடகர்களை உருவாக்கியது. இதில் சப்த ஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பங்குபெற்று பின்னாளில் சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியவர்தான் பாடகர் ரஞ்சித்.

மனைவியை பிரிந்ததால் இசைக்கு ஓய்வு கொடுக்கிறாரா ஏஆர் ரஹ்மான்? மகன், மகள் ரியாக்சன் என்ன?

இவரது பாடல்களைக் கேட்டாலே நேரம் செல்வதே தெரியாத அளவிற்கு மெலடியில் நம்மைக் கரையவைக்கும் குரலுக்குச் சொந்தக் காரராக விளங்கினார். 90-களில் பிறந்தவர்களுக்கும், 2000-ம் ஆண்டின் தொடக்கத்தில் பிறந்தவர்களையும் தனது குரலால் வசியம் செய்தார். மணிசர்மா இசையில் ஆசை ஆசையாய் படத்தில் இடம்பெற்ற ஹே பெண்ணே திரும்பிப் பாரு.. பாடலின் மூலம் இசைத்துறையில் அடியெடுத்து வைத்தார் ரஞ்சித். இவர் பாடிய அவள் அப்படி ஒன்றும் அழகில்லை, ஈரம் படத்தில் மழையே.. மழையே.. கும்கி படத்தில் சொல்லிட்டாளே அவ காதல.. போக்கிரி படத்தில் நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்.., சிவா மனசுல சக்தி படத்தில் உயிரே பாடல்.. உத்தமபுத்திரன் படத்தில் இடிச்ச பச்சரிசி.., காதல் கொண்டேன் படத்தில் நட்பினிலே நட்பினிலே.. தாமிரபரணி படத்தில் கருப்பான கையால.. போக்கிரியில் டோலு.. டோலுதான் அடிக்கிறான்.. சிறுத்தை படத்தில் ராக்கம்மா பாடல், சுக்ரன் படத்தில் சப்போஸ் என்ன காதலிச்சா.. போன்ற ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இளம் நடிகர்கள் பலருக்கும் ரஞ்சித்தின் குரல் ஒத்துப் போகும். மேலும் அனைத்துப் பாடல்களுமே ஹிட் லிஸ்ட்டில் இணைந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார் ரஞ்சித்.