இந்திய கேப்டனாக.. விராட் கோலிக்கு பிறகு ரோஹித் சந்தித்த அவமானம்.. சோதனை மேல் சோதனை..

இந்திய அணியின் கேப்டனாக தற்போது ரோஹித் சர்மா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டு வரும் நிலையில், கோலிக்குப் பிறகு மிகவும் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு…

Captains Kohli and Rohit

இந்திய அணியின் கேப்டனாக தற்போது ரோஹித் சர்மா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் செயல்பட்டு வரும் நிலையில், கோலிக்குப் பிறகு மிகவும் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது பற்றி தற்போது பார்க்கலாம். ஒரு காலத்தில் இந்திய அணியின் கேப்டனாக தோனி அனைத்து வடிவிலான போட்டிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டு சென்றிருந்தார்.

அவரது இடத்தை சச்சினை போல இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் சாதித்த விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டிருநந்தார். தோனி விட்டு சென்ற இடத்திலிருந்து ஆரம்பித்த கோலி, இந்திய அணியை இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்று சிறப்பாக வழிநடத்திச் சென்றிருந்தார். அதிலும் ரெஸ்ட் அரங்கில் இந்திய அணி நம்பர் ஒன்னாக விளங்குவதற்கு முக்கிய காரணமாக இருந்த விராட் கோலி பேட்டிங்கிலும் எந்தவித சொதப்பலும் இல்லாமல் நம்பர் ஒன் வீரராக விளங்கி இருந்தார்.

பேட்டிங்கில் சொதப்பும் ரோஹித்

சில சர்ச்சைகளுக்கு மத்தியில் இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகிய சூழலில் அவரது இடத்தை ரோஹித் சர்மா தற்போது நிரப்பி தலைமை தாங்கி வருகிறார். அவரது தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், கடந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றிருந்தது. கேப்டனாக ரோஹித் சர்மா சர்வதேச அரங்கில் ஜொலித்தாலும் சமீப காலமாக அவரது பேட்டிங் மிக மோசமாக இருந்து வருகிறது.

அதிலும் தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் பங்களிப்பு மிக மிக குறைவாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அவர் களமிறங்கி இருந்தார். ஆறு ஆண்டுகளாக தொடக்க வீரராக களமிறங்கி வந்த ரோஹித் ஷர்மா, கிரிக்கெட்டின் ஆரம்ப காலத்தில் ஆடியது போல இந்த போட்டியில் மிடில் ஆர்டரில் இறங்கி இருந்தார்.
Indian Cricket

இதனால் ரோகித் சர்மா இந்த முறை நிச்சயம் இந்திய அணிக்காக பெரிய பங்கு வகிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவிக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் பும்ராவின் கேப்டன்சியில் வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணி, ரோஹித் வரவிற்கு பின்னர் தோல்வி அடைந்துள்ளது.

கோலிக்கு பின் ரோஹித்..

சுமார் இரண்டரை நாட்கள் நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி எந்த இடத்திலும் ஆதிக்கம் செலுத்தவில்லை. மேலும் ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலும் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இந்திய கேப்டனாக ரோஹித் ஷர்மா மாறி உள்ளார்.
Rohit Sharma Captain

இதற்கு முன்பு மூன்று வடிவிலும் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எதிரணியை வெற்றி பெற செய்த இந்திய கேப்டனாக கோலி மட்டும் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.