வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகையை மறைமுகமாக குறைத்துள்ள நிலையில் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் பலர் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாற இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏர்டெல் ரீசார்ஜ் விலையை உயர்த்திய நிலையில் அதை தொடர்ந்து ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனமும் ரீசார்ஜ் விலையை உயர்த்தியது. மூன்று முன்னணி தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் விலையை உயர்த்திய நிலையில் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் சென்றார்கள் என்பதும் அதை பயன்படுத்தி பிஎஸ்என்எல் புதிய சலுகை திட்டங்களை அறிவித்ததால் அந்த நிறுவனத்திற்கு தினமும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அதிகரித்துக் கொண்டே உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது வோடபோன் நிறுவனம் 479 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் இதுவரை – 56 வேலிடிட்டி நாட்கள் மற்றும் தினமும் 1.5 ஜிபி டேட்டா கொடுத்து வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி என்பதை 48 நாட்கள் என எட்டு நாட்கள் குறைத்து விட்டது. அதேபோல் 1.5 ஜிபி டெய்லி டேட்டாவை 1 ஜிபி ஆக குறைத்து மறைமுகமான விலை உயர்வை அறிவித்துள்ளது.
இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள வோடோபோன் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டை வாங்க போவதாக கூறி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.