1996 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 28 ஆண்டுகளில் ஒவ்வொரு மாதமும் எஸ்ஐபி முறையில் எந்த தேதியில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்று தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு செய்தது.
இந்த ஆய்வில் ஒவ்வொரு மாதமும் 2ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்களுக்கு லாபம் கணக்கிடும் போது கிட்டத்தட்ட அனைத்துமே ஒரே சதவீதத்தில் தான் வருமானம் கிடைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
2ஆம் தேதி எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்களுக்கு 15.62% வருமானமும், 24 ஆம் தேதி முதலீடு செய்பவர்களுக்கு 15.63% வருமானமும் கிடைத்துள்ளது. எனவே எந்த தேதியில் SIP தொடங்க வேண்டும் என்பது கணக்கு ஒன்றும் இல்லை. நம்முடைய சம்பள தேதிகளிலிருந்து மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து எஸ்ஐபி முதலிடத்தை தேதியை நிர்ணயம் செய்து கொள்ளலாம்.