அமரன்.. சிவகார்த்திக்கேயன் நடிப்பில் செம மாஸ்.. கொண்டாடும் ஓடிடி ரசிகர்கள்

சிவகார்த்திக்கேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. தீபாவளி ரிலீஸ் படங்களில் பெறும் வெற்றி பெற்ற அமரன் படம் ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்,…

Amaran 6

சிவகார்த்திக்கேயன், சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. தீபாவளி ரிலீஸ் படங்களில் பெறும் வெற்றி பெற்ற அமரன் படம் ஓடிடி ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் படம் மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை கதையை வைத்து எடுக்கப்பட்டது. மேஜர் முகுந்த் மனைவி இந்துவாக சாய் பல்லவி நடித்திருந்தார். இருவருமே அந்த கதாபாத்திரங்களாவே வாழ்ந்திருந்தார்.

Amaran 4

தியேட்டரில் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது அமரன் திரைப்படம். அமரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் வாங்கிய நிலையில், ஓ.டி.டி.தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

கல்லூரி கால காதல், ராணுவ வீரராக பயணம் நாட்டுக்காக தன்னை அர்ப்பணித்துக்கொள்வது என மேஜர் முகுந்தாகவே வாழ்ந்திருக்கிறார். தனது கணவனுக்கு எதுவும் நடந்து விடக்கூடாது என்று கலங்கும் இந்து கடைசியில் ஒரு துளி கண்ணீர் கூட சிந்தாமல் கம்பீரமாக அழுகையை விழுங்கிக் கொண்டு நடித்திருக்கிறார். இப்போது செல்போனில் பலரது ரிங்டோன் பிஜிஎம் அமரன் இசைதான்.

ஹே மின்னலே.. என்று பாடிக்கொண்டிருக்கிறார்கள் இளம் காதலர்கள். அமரனில் முகுந்தின் பெற்றோர்கள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள். கிளைமேக்ஸ் காட்சியில் முகுந்தின் குழந்தை கேட்கும் கேள்வி பலரது கண்களின் ஓரத்தில் கண்ணீரை எட்டிப்பார்க்க வைத்து விட்டது.

Amaran 5

காதல், தேசப்பற்று, பெற்றோர்களின் பாசம், மனைவி, மகளின் அன்பு மழை என அனைத்தையும் சரிவிகிதமாக கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. கூடவே மயிலிறகாக வருடுகிறது ஜிவி பிரகாஷின் இசை. ஹே மின்னலே.. ஹே மின்னலே என்று பலரும் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சிவகார்த்திக்கேயன் கேரியலில் மறக்கமுடியாத திரைப்படமாக அமரன் அமைந்து விட்டது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது அமரன்.  என்னதான் தியேட்டரில் பிளாக் பஸ்டர் படங்கள் ரிலீஸ் ஆனாலும் ஓடிடியில் வெளியான அமரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது உண்மை.