Spotify-ல் 2024-ன் டாப் 10 பாடல்கள் எது தெரியுமா? முதல் இடம் இந்தப் பாடலுக்கா..!

சினிமா எப்படி டிவி, ஒடிடி எனப் பரிணாமம் பெற்று வளர்ந்து வருகிறேதோ அதேபோல் தான் பாடல்கள் கேட்க இசைத்தட்டு, ரேடியோ, சிடி பிளேயர், பண்பலை வானொலிகள், டேப்ரிக்கார்டர்கள் எனப் பரிணாமம் பெற்று தற்போது மியூசிக்…

Spotify

சினிமா எப்படி டிவி, ஒடிடி எனப் பரிணாமம் பெற்று வளர்ந்து வருகிறேதோ அதேபோல் தான் பாடல்கள் கேட்க இசைத்தட்டு, ரேடியோ, சிடி பிளேயர், பண்பலை வானொலிகள், டேப்ரிக்கார்டர்கள் எனப் பரிணாமம் பெற்று தற்போது மியூசிக் ஆப்ஸ்களாக புதிய வடிவில் இசை ரசிகர்களை ஆட்கொள்கின்றன.

உங்களுக்குப் பிடித்த பாடல்களை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், பிடித்த பிளே லிஸ்ட்களை விளம்பரங்கள் இன்றி பல மியூசிக் ஆப்ஸ்கள் வழங்கி வருகின்றன. அவற்றில் உலக அளவில் முதலிடத்தில் இருக்கும் மியூசிக் செயலிதான் Spotify.

கடந்த 2006-ல் ஸ்வீடன் நாட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது உலகமெங்கும் பாடல்கள் மற்றும் பாட்காஸ்ட்கள் ஆகியவற்றிற்காகவே சிறந்து விளங்கி வருகிறது. உலகமெங்கும் கிட்டத்தட்ட 640 மில்லியன் சந்தாதாரர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் வருவாய் மட்டும் 2023-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 532 மில்லியன் யூரோவாக உள்ளது.

இப்படி இசை ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருக்கும் Spotify செயலியில் இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்து பாடல்களைக் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர். துல்லியமான இசை, குறைவான விளம்பரம் போன்றவற்றால் Spotify பலராலும் விரும்பப்படுகிறது.

கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ.. ஒரே திட்டத்தில் அனைத்து சேனல்கள்..!

தற்போது Spotify செயலியில் 2024-ம் ஆண்டில் அதிகம் கேட்கப்பட்ட தமிழ் பாடல்களின் விபரம் வெளியாகி உள்ளது. இதில் முதலிடத்தில் சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’ ஆல்பம் பாடல் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக சூப்பர் ஸ்டாரின் மனசிலாயோ பாடல் அனைவரையும் ஆட்டி வைத்தது குறிப்பிடத்தக்கது. இப்பாடல் இரண்டாம் இடத்தில் உள்ளது. மூன்றாம் இடத்தில் மீண்டும் சாய் அபயங்கரின் ‘நீ பேச லைட்டா ஆச கூட..’ பாடல் இடம்பெற்றிருக்கிறது.

தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் விசில் போடு…, அச்சோ அச்சோ அச்சச்சோ.., வாட்டர் பாக்கெட்…, ஹண்டர் வண்ட்டார்.., காத்து மேல…, மட்ட.., கதரல்ஸ்… ஆகிய பாடல்கள் இடம்பிடித்திருக்கிறது.