தாலி கட்டுற நேரத்துல தான் இப்படி செய்யணுமா.. நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை பார்த்த வேலை.. வைரல் பின்னணி..

By Ajith V

Published:

இந்தியாவில் நடக்கும் திருமணம் தொடர்பாக வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு செய்திகள் நிச்சயம் சமூக வலைத்தளங்களில் அதிக கவனத்தை பெறும். ஒரு பக்கம் எதிர்பாராத அசம்பாவிதங்கள் அல்லது பரபரப்பு செய்திகள் தொடர்பான நிகழ்வுகள் இணையத்தை பற்ற வைத்துக் கொண்டிருக்கும். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்திற்கு நடுவே மினி டிம்போ ஒன்றில் ஏறி ஆக்ஷன் காட்சியை போல இயங்கி கொண்டிருந்த வீடியோ அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

குதிரையில் பண மாலையை போட்டு வந்த அந்த மாப்பிள்ளையின் கழுத்தில் இருந்து அதனை எடுத்துவிட்டு மினி டிம்போ ட்ரைவர் தப்பிக்க, பைக்கில் துரத்தி பிடித்து அவரை அடிக்க முயற்சித்த சம்பவம் என்பது பின்னர் தெரிய வந்தது. இதே போல, தாலி கட்டும் நேரத்தில் கூட சில திருமணங்கள் நின்று போனது பற்றியும், மணமகள் அல்லது மணப்பெண் ஆகியோர் வித்தியாசமான என்ட்ரிகள் கொடுப்பது என இந்தியாவில் நடக்கும் திருமணத்தை சுற்றி நடைபெறும் வைரல் சம்பவங்களுக்கு எந்தவித குறையும் இருக்காது.

வைரலாகும் இந்திய திருமணங்கள்

தான் விரும்பிய பெண்ணை கரம்பிடிக்க போகும் போது வேடிக்கையாக ஏதாவது கவனம் ஈர்க்கும் மாப்பிள்ளைகள் ஒரு பக்கம் இருக்க, சொந்த திருமணத்தை விட வேறு சில விஷயங்கள் தான் முன்னுரிமை என்ற வகையில் இருக்கும் சில மாப்பிள்ளைகள் இணையவாசிகள் பலரையும் அதிர வைத்தும் வருகிறார்கள்.

அந்த வகையில், திருமண நேரத்தில் ஷேர் மார்க்கெட்டில் தனது மொபைலில் முதலீடு செய்து கொண்டிருந்த மாப்பிள்ளை வரிசையில் தற்போது ஒரு புதிய மாப்பிள்ளையும் கவனம் ஈர்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வரும் நிலையில்,அதன் பின்னணி என்ன என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

திருமணம் நெருங்கும் போது மணமக்கள் எப்போதுமே ஒருவித பதற்றத்தில் தான் இருப்பார்கள். அங்கிருக்கும் அனைவரது பார்வையும் இரண்டு பேர் மீது விழும் என்பதால் ஒரு பதற்றம் இருக்கும். ஆனால் தற்போது எதையும் பற்றி கவலைப்படாமல் தங்களது விருப்பத்திற்கு சிரித்துக் கொண்டே இருக்கவும் பலர் கற்றுக் கொண்டார்கள்.

லூடோ கேம் ஆடும் மாப்பிள்ளை..

அந்த வகையில், மாப்பிள்ளை ஒருவர் தனது திருமணத்தின் போது புகைப்பட கலைஞர்கள், ஐயர்கள் என அனைவரும் பிசியாக இருக்க, தனது நண்பர்களுடன் இணைந்து மொபைலில் லூடோ கேமை விளையாடிக் கொண்டிருக்கிறார். அங்கே இருக்கும் மற்றவர்கள் கூட பரபரப்பாக இயங்க, மாப்பிள்ளை கூலாக இருந்து கேம் விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.
Groom Ludo Game

இதை பார்க்கும் பலரும் பல விதமான கருத்துக்களை கமெண்டில் பதிவிட, மணப்பெண்ணை விட லூடோ தான் அவருக்கு முன்னுரிமை என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டு வருகின்றனர்.