Bigg Boss Tamil Season 8 Day 58 இல் கேப்பிட்டன்சி டாஸ்க் நடைபெற்றது. ஜெப்ரியும் சாச்சனாவும் ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு சென்றனர். அங்கு நம்பர் பிளேட் போல வைத்திருந்தார்கள். அதில் ஸ்கிரீனில் தெரியும் நம்பரை மனப்பாடம் செய்து பிளேட்டை எடுக்க வேண்டும்.
இதில் பல சுற்றுகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவரானார். அடுத்ததாக பிக் பாஸ் இந்த வாரம் அசிஸ்டன்ட் ஆக ஒரு கேப்டனை செலக்ட் செய்யுங்கள் தலைவரை தவிர மற்றவர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு எல்லோரும் ஒருமனதாக சாச்சனாவை அசிஸ்டன்ட் ஆக செலக்ட் செய்தார்கள்.
அதற்குப் பிறகு ஜெஃப்ரி இந்த வாரம் நாம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது என்பதை பற்றி கூறினார். முக்கியமாக இந்த மிட்நைட் பிரியாணி எல்லாம் தயவு செஞ்சு செய்ய வேண்டாம் என்று கூறினார். அடுத்ததாக நாமினேஷன் பிராசஸ் நடைபெற்றது. இந்த தடவை அதிக பேர் நாமினேஷனில் இருக்கிறார்கள். ஆக்டிவிட்டி ஏரியாவில் நேருக்கு நேராக கூப்பிட்டு நிப்பாட்டி காரணத்தை சொல்லி நாமினேட் செய்ய பிக் பாஸ் கூறினார்.
தீபக் விஷால் அன்சிகா ஜெஃப்ரி ஆகியோரை தவிர மீதி அத்தனை 12 பேரும் நாமினேஷனில் இருக்கிறார்கள். அதற்கு அடுத்ததாக ஷாப்பிங் டாஸ்க் நடைபெற்றது. ஷாப்பிங் டாஸ்க்கு பாயிண்ட் பெறுவதற்கு ஆக்டிவிட்டி ஏரியாவில் பாட்டு கண்டுபிடிக்கும் டாஸ்க் நடைபெற்றது. இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தது.
அதாவது ஒரு கண்டஸ்டன்ட் பாட்டை கேட்டு ஆக்ஷன் மூலமாக சொல்ல வேண்டும் மற்றவர்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதன்படி பாயிண்ட்ஸ் எடுத்து ஷாப்பிங் செய்தார்கள். பிறகு இன்றைய நாள் நாமினேஷனை பற்றி தான் மாறி மாறி ஒவ்வொரு குரூப்பாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த காரணம் சரியில்லை அவர் சொன்னது சரியில்லை என்று பவித்ரா அதிகமாக பேசினார். இனி அடுத்ததாக இந்த வாரம் என்ன டாஸ்க் நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.