தமிழ்சினிமா உலகில் எஸ்.ஜே.சூர்யா இயக்குனராக அடி எடுத்து வைத்ததுமே இரண்டு மிகப்பெரிய சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தார். அவற்றில் ஒன்று அஜீத் நடிப்பில் வெளியான வாலி. அடுத்து விஜய் நடிப்பில் வெளியான குஷி. இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இப்போது அஜீத் நடித்த விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வெளியாகிறது. அதே போல எஸ்.ஜே.சூர்யா நடித்த கேம் சேஞ்சரும் வெளியாகிறது. இரு படங்களுக்கும் போட்டியா என்று கேட்டபோது எஸ்.ஜே.சூர்யா என்ன பதில் சொல்கிறார்னு பார்ப்போமா…
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 15வது பட்டம் அளிப்பு விழாவில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் எஸ்.ஜே.சூர்யா என்ன பேசினார்னு பார்க்கலாமா….
விடாமுயற்சி டீசர்
கேம் சேஞ்சர், விடாமுயற்சி இரண்டு படமும் பொங்கலுக்கு வருது. இதுல போட்டி ஒண்ணும் கிடையாது. கேம் சேஞ்சர் ரிலீஸ் டேட் முன்னாடியே அறிவிச்சிட்டாங்க. இப்ப தான் விடாமுயற்சி பற்றி அறிவிச்சிருக்காங்க.
அஜீத் சார் வந்து போர்ஷனையே வேற லெவலுக்குக் கொண்டு போயிட்டார். எல்லாருக்கும் தெரியும். அது போல இதுவும் வரட்டும் என்றார் எஸ்.ஜே.சூர்யா. விடாமுயற்சியோட டீசர் பார்த்தீங்களான்னு கேட்டதுக்குப் பார்த்தேன். ரொம்ப நல்லாருக்கு என்றார்.
இந்தியன் 3
அதே போல இந்தியன் 3 பற்றிக் கேட்கும்போது கேம் சேஞ்சர் மிகப்பெரிய வெற்றி அடையும். அந்த வெற்றி வந்து இந்தியன் 3க்கு ப்யூயல் போட்டுத் தூக்கி விடும். ஷங்கர் சார் மிகப்பெரிய உழைப்பாளி. அவரோட உழைப்பு இந்திய சினிமாவுக்கே பெருமை. அவர் ரியல் கேம் சேஞ்சர்.
கில்லர்
அதுபோல கௌரவ டாக்டர் பட்டம் வாங்கினதற்கு இது உழைப்புக்குக் கிடைச்ச மரியாதையாத் தான் நான் பார்க்கிறேன். நான் அறிவாளியா முட்டாளான்னு தெரியாது. ஆனா மிகப்பெரிய உழைப்பாளி. அதை மட்டும் சொல்ல முடியும் என்றார். தான் இயக்கும் அடுத்த படம் நியூ 2 இல்ல. அது மாதிரி கில்லர். இது குறித்த அறிவிப்பு வரும் ஜனவரியில் வெளியாகும். கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்துல வந்துடும் என்றார்.
கேம் சேஞ்சர் Vs விடாமுயற்சி
கேம் சேஞ்சர் படம் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது. ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, டில் ராஜூ, ஜெயராம், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். டில் ராஜூ தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 10ம் தேதி 2025ல் ரிலீஸ் ஆகிறது.
அது போல சமீபத்தில் விடாமுயற்சி டீசர் வெளியாகும்போது அந்தப் படமும் பொங்கல் அன்று வெளியாவதாக அறிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அஜீத், ஆரவ், திரிஷா, அர்ஜூன் உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.