ஸ்டூடன்ட் விசா வாங்கி முறைகேடாக கனடாவுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கனடா இப்போதுதான் சுதாரித்து ஸ்டூடன்ட் விசாக்களை ஆய்வு செய்தது. அவ்வாறு ஆய்வு செய்ததில், 2023 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10,000 போலியான ஆவணங்களை தாக்கல் செய்து ஸ்டூடன்ட் விசா எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.
இதனை சரிபார்த்த கனடாவின் நிறுவனம், 10,000 போலியான மாணவர் விசாக்களை கண்டுபிடித்ததாகவும், இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 80 சதவீத ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் ஸ்டூடன்ட் விசாக்களை ஆய்வு செய்ததில், சுமார் 1,485 மாணவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர் என்றும் அவர்கள் விரைவில் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து கனடாவுக்கு படிக்க வரும் மாணவர்கள், தங்களுடைய கல்லூரி சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் ஆய்வறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தாலும், அல்லது போலி விசா மூலம் வந்திருப்பதாக தெரிந்தாலும், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தப்படும். அவர்கள் நாடுகடத்தப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கனடா அரசு அறிவித்துள்ளது.