வாட்சை இனி கையில் கட்ட வேண்டாம், விரலில் அணியலாம்.. Casio அறிமுகம் செய்யும் புதிய மாடல்..!

By Bala Siva

Published:

வாட்ச் கண்டுபிடித்த நாளில் இருந்து காலம் காலமாக கையில் காட்டும் வாட்ச் தான் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது முதல் முறையாக கேசியோ நிறுவனம் விரலில் மோதிரம் போல் அணியும் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதனை அடுத்து, இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.கேசியோ நிறுவனம் புது வகையாக விரலில் அணியும் வாட்சை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், இந்த வாட்ச் எலக்ட்ரானிக் வாட்ச் போல் மணி, நிமிடம் மற்றும் வினாடிகள் கொண்டது. தேதியுடன் அனைத்து விவரங்களும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எல்.சி.டி ஸ்கிரீனால் உருவாக்கப்பட்ட இந்த சிறப்பு மாடலை கேசியோ நிறுவனம் தனது ஐம்பதாவது வருட கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிறப்பு வெளியிடாக அறிமுகம் செய்கிறது.

வழக்கமான வாட்ச்களை விட பாதி அளவில் உள்ள இந்த வாட்ச், 19 மற்றும் 16 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இனி, கையில் கட்டாமல் விரலில் அணிந்து கொண்டே டைம் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல உறுதியான மெட்டல் உலோகத்தால் உருவாக்கப்பட்ட இந்த வாட்சின் பின்பக்கம் பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டதுடன், பேட்டரியை எளிதாக மாற்றும் வசதி உள்ளது.

எல்.சி.டி ஸ்கிரீனின் மேல் கண்ணாடி கிளாஸ் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு டிஜிட் இலக்கங்களைக் கொண்டு மணியை மிகவும் எளிதாக பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ச், வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாட்ச் மக்கள் மத்தியில் பிரபலமானால், இனி அனைவரும் கையில் வாட்ச் கட்டாமல், விரலில் தான் வாட்ச் அணிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாட்சின் விலை குறித்த அறிவிப்பை இன்னும் ஓரிரு நாளில் கேசியோ நிறுவனம் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: casio, finger, watch