பார்ப்பதற்கு சாதாரண மனிதர்களாக நம்முடனே உலவும் பலரும் ஏதாவது ஒரு குற்றங்களை செய்து கொண்டு ஜெயிலில் செல்வதை கேள்விப்பட்டிருப்போம். நாம் ஓரளவுக்கு கவனிக்கும் நபர் திடீரென ஜெயிலில் செல்வது தொடர்பான செய்தியை பார்க்கும்போது இவர் இப்படி செய்திருப்பாரா என்றே கூட யோசிக்க தோன்றும். அப்படி ஏதாவது ஒரு புகாரில் சிக்கி சில நாட்கள் ஜெயிலில் கழிக்கும் நபர்கள் வாழ்வை அது எப்படி வேண்டுமானாலும் பின்னாளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். ஒருவேளை இன்னும் குற்றங்கள் செய்ய வேண்டும் என்று தோன்றலாம். இன்னொரு பக்கம் குற்றங்களை குறைத்துக் கொண்டு நல்ல மனிதனாக மாற வேண்டும் என்று தோன்றலாம்.
அப்படி ஒரு சூழலில் தான் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஜெயிலுக்கு சென்று விட்டு திரும்பிய சமயத்தில் செய்த விஷயம் தொடர்பான வீடியோ தற்போது பார்க்கும் பலரையும் சுவாரஸ்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் சிப்ரமோவ் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தான் இளைஞர் சிவா. இவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஒரு குற்ற புகாரில் தொடர்பு இருந்ததன் காரணமாக போலீசாரிடம் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இவருக்கு குடும்பத்தினர் இல்லை என தகவல் தெரிவிக்கும் நிலையில், யாரும் அவரை பெயிலில் எடுக்க முயற்சி செய்யவில்லை என கூறப்படுகிறது. வழக்கறிஞர்களும் கூட வராமல் போக, ஒரு தொண்டு நிறுவனம் தான் சிவா பற்றி தகவலறிந்து அவரை செலவில்லாமல் வெளியே எடுப்பதற்கான முயற்சிகளிலும் இறங்கி இருந்தது. மேலும் அவரது பெயிலுக்கு தேவையான பணத்தையும் கொடுத்து அந்த தொண்டு நிறுவனம் உதவி செய்ய, அவர் சமீபத்தில் ஜெயிலில் இருந்து விடுதலையும் ஆகியிருந்தார்.
முன்னதாக, 11 மாதங்கள் சிறை வாசம் வாழுவதற்கு முன்பாக, சிவா எழுத படிக்க தெரியாமல் இருந்துள்ளார். ஆனால் உள்ளே சென்ற பின்னர் படிக்கவும், எழுதவும் கற்றுக் கொண்டதுடன் தனது கையெழுத்தை போடவும் பழகி உள்ளார். மேலும் தற்போது ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ள அவர், இனிமேல் எந்தவித குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயிலுக்குள் இருந்த சமயத்தில் தான் எழுதவும் படிக்கவும் உதவி செய்த சுப்பரின்டெண்டிற்கும் தனது நன்றிகளை இளைஞர் சிவா தெரிவித்துள்ளார். இதனிடையே தான் ஜெயிலில் இருந்து வெளியே வந்த சிவா, அப்படியே தேர்ந்த நடன கலைஞர் போல நடனமாடிய வீடியோ தற்போது அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.
அப்போது சிறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் அனைவரும் இதனை சிரித்துக் கொண்டே ரசிக்க, புதிய வாழ்க்கை கிடைத்த உற்சாகத்தில் இளைஞர் செய்த இந்த விஷயம் தற்போது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.
उत्तर प्रदेश के कन्नौज जिले की जेल से रिहाई के बाद एक बंदी ने मुख्य गेट पर नाचकर अपनी खुशी का इजहार किया। pic.twitter.com/aNKQmTzcik
— Shivam Bajpai (@JBreakingBajpai) November 27, 2024