வங்கக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இதனையடுத்து இந்தப் புயலுக்கு சவூதி அரேபியா ஃபெங்கல் என்று பெயரிட்டது. தமிழகத்தின் சென்னை, கடலூர், பாண்டிச்சேரி, நாகை, திருவள்ளுர் உள்ளிட்ட கடல்பகுதிகளில் புயல் கரையைக் கடக்கும் என்பதால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது.
இந்நிலையில் புயல் வலுவிழந்து மெதுவாக நகரத் தொடங்கியது. இதனால் மழையின் அளவும் குறைந்து மிதமான மழையே பெய்தது. இந்நிலையில் ஃபெங்கல் புயல் மீண்டும் வலுப்பெற்று தீவிரப் புயலாக நாளை 30.11.2024 அன்று காரைக்கால்-மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக பேரிடர் மீட்பு மேலாண்மை ஆணையம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
புயல் கரையை கடக்கும் போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, “அனைத்து கட்டுமான நிறுவனங்களும் தங்களது கட்டுமானத் தளங்களில் உள்ள கிரேன்கள் மற்றும் உயர்ந்த இடத்தில் உள்ள உபகரணங்கள் காற்றின் காரணமாக ஆடுவதலோ அல்லது விழுவதாலோ, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்க்க கிரேன்களை கீழே இறக்கி வைக்குமாறும் அல்லது உறுதியாக நிலைநிறுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
12 மணி நேரத்தில் 4 மில்லியன்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் விடாமுயற்சி டீஸர்
மேலும், விளம்பரப் போர்டுகள் வைத்திருக்கும் அனைவரும் தங்களது விளம்பர போர்டுகளை பாதுகாப்பாக இறக்கி வைக்குமாறும் அல்லது புயல் காற்றினால் விளம்பரப் போர்டுகள் சாயவோ அல்லது விழாமலோ இருக்கும் வகையில் உறுதிபடுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்துகிறது. இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.