பிரியாணிக்கு நடுவுல இது எப்படி??.. உயிரினம் இல்ல.. அத விட ஆபத்தான விஷயம்.. கொந்தளித்த இளைஞர்கள்.. வீடியோ

By Ajith V

Published:

உடை, தங்குவதற்கான இடம் மற்றும் உணவு உள்ளிட்ட விஷயங்கள் எந்த காலத்திலும் மனிதனுக்கு அடிப்படை தேவையாகவே உள்ளது. பணம் எத்தனை சம்பாதித்தாலும், பணமே இல்லை என்றாலும் மேற்குறிப்பிட்ட விஷயங்கள் இல்லை என்றால் அவர்களின் வாழ்க்கை திண்டாட்டம் தான். அதிலும் சமீப காலமாக ஆரோக்கியம் இல்லாத உணவுகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருவதால் முடிந்த அளவுக்கு இயற்கை உணவுகளை உண்பதற்கும் மக்கள் தயாராக உள்ளனர்.

அந்த காலத்தில் எல்லாம் மனிதர்கள் 90 முதல் 100 வயது வரையிலும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது மனிதர்களின் சராசரி வயதும் குறைந்து கொண்டே இருக்க இதற்கு உணவு முறைகளும் மிக முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் முடிந்தவரையிலும் வெளியே சென்று உணவு உண்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் என்றாவது ஒருநாள் விருப்பப்படும் போது வெளியே சென்று உண்ணுங்கள் என்றும் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

உணவகங்களில் இருக்கும் அபாயம்

ஒரு பக்கம் தங்களது வாழ்நாள் தொடர்பாக பயத்தில் இருப்பவர்கள் வீட்டிலேயே முடிந்த அளவுக்கு சிறப்பான வகையில் உணவை தயார் செய்து உண்கிறார்கள். இன்னொரு பக்கம் முடிந்த அளவுக்கு வீட்டில் உணவு உண்டாலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அல்லது நண்பர்களுடன் ஏதாவது ஒரு சந்திப்பு நிகழும் போது அவர்கள் வெளியே சென்று உண்பதை நிச்சயம் தவிர்க்க முடியாது. அந்த வகையில் சமீபத்தில் சில நண்பர்கள் இணைந்து ஹைதராபாத் பகுதியில் இருக்கும் பிரபல உணவகம் ஒன்றில் பிரியாணி உண்ட சமயத்தில் அவர்களுக்கு நேர்ந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நண்பர்கள் இணைந்து ஹைதராபாத் பகுதிகளில் இருக்கும் உணவகத்தில் பிரியாணியை உண்டுள்ளனர். அந்த சமயத்தில் ஒரு வாலிபரின் பிளேட்டில் இருந்த பிரியாணியில் சிகரெட் துண்டு கிடந்துள்ளது. அதுவரையிலும் உண்டு கொண்டிருந்த அவர் இதை பார்த்ததும் ஒரு நிமிடம் அருவருப்பு அடைந்ததுடன் மட்டுமில்லாமல் ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடுமையாக கொந்தளிக்கவும் செய்துள்ளார். அங்கிருந்த அனைத்து நண்பர்களும் இணைந்து ஹோட்டலுக்கு எதிராக ஆவேசமடைந்து பல கருத்துக்களை தெரிவிக்க, ஊழியர்கள் மற்றும் நிர்வாகத்தினர் முடிந்த அளவுக்கு அவர்களை சமரசம் செய்யவும் முயற்சி செய்தனர்.

பிரியாணியில் சிகரெட் துண்டு

என்னவாக இருந்தாலும் அவர்களது கோபம் சரிதான் என்பதும் உணவில் சிகரெட் துண்டு கிடப்பது எவ்வளவு ஆபத்தான விஷயம் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல், பிரியாணி தயார் செய்து கொண்டிருந்தவர் அதை புகைத்திருக்கலாம் என்றும் அதன் பின்னர் அது எப்படியோ தவறுதலாக விழுந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆனால் காரணம் எதுவாக இருந்தாலும் இப்படி நடப்பு நடந்தது மிகப்பெரிய தவறு என்றும் அந்த சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களிலும் பார்ப்பவர்கள் பலரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. இப்படி எத்தனை உயர்ந்த உணவகங்களில் இருக்கும் என்றும், அங்கேயும் இப்படி உணவு சுகாதாரம் கேள்விக்குறி தான் என்பதும் பலரின் வாதமாக உள்ளது.