நடிகை சமந்தா வீட்டில் நடந்த துக்கம்.. மனமுடைந்து சமந்தா போட்ட பதிவு

By John A

Published:

நடிகை சமந்தாவின் தந்தை ஜோசப் பிரபு உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த சில வருடங்களாக சமந்தா வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதே நிலைக்கவில்லை. அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யா பிரிவு, மயோசிடிஸ் நோயால் பாதிப்பு என அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் சமந்தா மனதளவில் பாதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் தனது மன உறுதியால் அனைத்தையும் எதிர்கொண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சோஷியல் மீடியாக்களிலும் பதிவுகளை போட்டு வருகிறார்.

கவின் இல்ல.. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில்.. நடிப்பது இவர் தான்.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு..

தமிழில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சமந்தா குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக மாறினார். சமந்தாவின் குடும்பத்தினர் சென்னையில்தான் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சமந்தாவின் தந்தையாகிய ஜோசப் பிரபு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார். ஜோசப் பிரபு தெலுங்கு ஆங்கிலோ-இந்தியர் ஆவார். சமந்தாவின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தும், நேரில் வந்து சமந்தாவுக்கு ஆறுதல் கூறியும் வருகின்றனர்.

தனது தந்தை மறைவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Until we meet again Dad என்று இதயம் நொறுங்கும் எமோஜியுடன் பதிவிட்டிருக்கிறார். சமந்தாவின் இரசிகர்கள் அவருக்கு ஆறுதலாகவும், மன வலிமை கிடைக்க வேண்டியும் கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர்.