நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவல்கள் வந்த நிலையில் இன்று அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார். தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது தயார் மேனாகவும் பிரபல நடிகையே. கீர்த்தி சுரேஷ் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருக்கிறார்.
2013-ல் ஹீரோயினாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக நடித்தார். இப்படம் இவருக்குத் திருப்புமுனையைக் கொடுத்தது. தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ், சூர்யா, விஷால் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் தங்கையாக நடித்தார்.
12 மணி நேரத்தில் 4 மில்லியன்.. டிரெண்டிங்கில் முதலிடத்தில் விடாமுயற்சி டீஸர்
தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் கீர்த்திசுரேஷ் தனது பள்ளிப் பருவத் தோழனான ஆண்டனி தட்டில் என்பவரை காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவருக்கும் திருமணம் என தகவல்கள் வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் 15 வருடங்கள் முடிந்தது. இன்னும் எங்கள் பந்தத்திற்கான நாட்கள் முடிவில்லாமல் தொடர்ந்த கொண்டிருக்கும். எப்போதும் கீர்த்தி மற்றும் ஆண்டனியின் உறவாக இருக்கும்.. எனப் பதிவிட்டிருந்தார். இதன் மூலம் தனது காதலரை அறிமுகம் செய்த கீர்த்தி சுரேஷ் இன்று திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தி சுரேஷ் அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது என்பதை உறுதி செய்தார். மேலும் இவர்களது திருமணம் கோவாவில் உள்ள சர்ச் ஒன்றில் நடைபெற இருப்பதாகக் கூறப்படுகிறது.