மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் திருமணம் என்பது வாழ்வின் முக்கிய சடங்காக இருக்கிறது. சந்ததிகளைப் பெருக்கவும், வாழ்க்கையின் அடுத்த நிலையை அடைந்து விட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் திருமணச் சடங்குகளைச் செய்கின்றனர். ஒவ்வொரு திருமணத்திற்கு தங்கள் பட்ஜெட்டைப் பொறுத்துச் செலவு செய்வார்கள். சிலர் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் தருவது, விதைப் பைகள் தருவது என வித்தியாசமான முறையில் நடத்துவர்.
அந்த வகையில் இங்கு ஒரு ஜோடி வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தினை நடத்தியிருக்கிறார்கள். அந்த கல்யாணம் தான் ஹெல்மெட் கல்யாணம். வழக்கமாக திருமணத்தன்று இருவரும் மாலை மாற்றி திருமண பந்தத்தை உறுதி செய்வார்கள். ஆனால் இவர்களோ ஹெல்மெட்டை ஒருவருக்கொருவர் அணிவித்து தங்களது திருமண பந்தத்தை உறுதி செய்திருக்கின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் ராஜ்நந்தகன் பகுதியில் வசிப்பவர் பிரேந்திரன். இவருக்கு ஜேழதி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பிரேந்திரன் தந்தை சாலை விபத்தில் உயிரிழந்திருக்கிறார். எனவே சாலை விபத்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தினை நடத்த நினைத்தார்.
ஆதார் கார்டு, கிரெடிட் கார்டு, சிம்கார்டு.. இந்த மூன்றிலும் டிசம்பர் முதல் முக்கிய மாற்றம்..!
அதன்படி, முதலில் அவர்கள் சமய வழக்கப்படி மோதிரத்தினை மாற்றிக் கொண்ட பின் ஹெல்மெட்டை மாற்றி திருமணத்தினை உறுதி செய்தனர். இவர்களின் செயலுக்கு வந்திருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் பாராட்டுத் தெரிவித்தனர். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மீறுபவர்களுக்கு காவல்துறை மூலமாக அபராதம் விதிக்கப்படுகிறது. எனினும் பலர் விழிப்புணர்வு இல்லாமல் வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசுவது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகத்தில் இயக்குவது, போக்குவரத்து விதிகளை மீறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு விபத்தில் சிக்கி தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கின்றனர்.