உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது… சிறைச்சாலையின் வலி… சொர்க்கவாசல் படத்தின் விமர்சனம் இதோ…

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன் நட்டி சானியா ஐயப்பன் பாலாஜி சக்திவேல் கருணாஸ்…

sorgavaasal

ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல். அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன் நட்டி சானியா ப்பன் பாலாஜி சக்திவேல் கருணாஸ் நடித்திருக்கும் திரைப்படம் சொர்க்கவாசல். இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இனி காண்போம்.

ஆர் ஜே பாலாஜி மனைவி மற்றும் தன் அம்மாவுடன் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். உணவு விற்பனையாளராக சுமுகமாக அவர் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஒரு கொலை குற்றத்திற்காக குற்றவாளிகள் கைது செய்யப்படும் போது எந்த தவறும் செய்யாத ஆர் ஜே பாலாஜி கைதாகி சிறைக்கு செல்கிறார். அவர் தன்னை நிரபராதி என்று எப்படி நிரூபிக்கிறார் சிறையில் இருந்து எவ்வாறு வெளி வருகிறார் என்பதே மீதி கதை.

படத்தில் முதல் பாகத்தில் செல்வராகவனின் நடிப்பு அனைவரும் பாராட்டுக்குரியதாக இருந்தது. கவனத்தையும் பெற்றது. நட்டி கருணாஸ் ஆர் ஜே பாலாஜி அம்மா மனைவி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருந்தனர். வழக்கமாக ஆர்.ஜே பாலாஜி நகைச்சுவை மற்றும் சமூக நீதி கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் இந்த படத்தில் முற்றிலும் வேறுபட்ட பரிமாணாமத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் சொர்க்கவாசல் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. சிறைச்சாலையில் சிறை காவலர்களை எதிர்ப்பது கொலை செய்வது போன்ற காட்சிகளில் லாஜிக் இடிக்கிறது. மற்றபடி சிறைச்சாலையில் வலிகளை எடுத்துக் கூறுகிறது இந்தப்படம். இது வன்மம் ரத்தம் காயம் ஆகியவற்றை கொண்டிருப்பதால் சிறுவர்கள் பார்ப்பதற்கு ஏற்புடையதல்ல. ஆனால் படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்திருப்பது பாராட்டுக்குரியது.