இந்த உலகமே வினோதமானது தான். உலகின் ஏதாவது ஒரு மூலையில் தினசரி ஏதாவது ஒரு விசித்திர சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே தான் இருக்கிறது. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் குரங்குகளுக்கு விநோத திருவிழா நடந்திருக்கிறது. கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதா?
நம்மூரில் உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோமே.. அதைப்போல் தாய்லாந்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் குரங்களுக்கு அறுசுவை உணவுத் திருவிழா வருடந்தோறும் நடைபெற்று வருகிறது.
தாய்லாந்து நாட்டின் பிரதான வருவாயே சுற்றுலாதான். சுற்றுலா வருவாயைப் பெருக்க அந்நாட்டு அரசு பல சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் தாய்லாந்து சுற்றுலா சொர்கபுரியாக விளங்குகிறது. தாய்லாந்து நாட்டில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான லோப்புரி மாகாணத்தில் வருடந்தோறும் குரங்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
மொரட்டு பாட்டியா இருப்பாங்க போல.. ஒருமணி நேரத்தில் 1575 Push-ups எடுத்து சாதனை
இப்பகுதியில் அதிக அளவிலான குரங்குகள் இருக்கின்றன. இவை சுற்றுலாப் பயணிகளை கவருவதால் இதற்காக விழா எடுக்க நினைத்த தொழிலதிபர் 1989-ம் ஆண்டிலிருந்து நவம்பர் மாதம் குரங்குகளுக்கு அறுசுவை உணவினை வழங்கி அவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடினார்.
பின்னர் இதுவே வழக்கமாகி ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் குரங்குகளுக்கு அறுசுவை உணவு படைக்கப்பட்டு அவைகளுக்கு உணவளித்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. வழக்கம் போலவே ஏராளமான குரங்குகள் அங்கு குழும பிறகென்ன தடபுடல் விருந்து கொண்டாட்டம் தான். உலகின் விசித்திர விழாக்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.