சாதிப்பதற்கு வயது என்றுமே தடையில்லை என்பதை பல சாதனைகள் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 90 வயதில் மாராத்தான் ஓடி வென்றவரைக் கேள்விப்பட்டிருக்கிறோம். 3 வயதிலேயே சாதித்த குழந்தைகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு 59 வயதான ஒரு பெண்மணி தனது உடலை இரும்பாக்கி ஒரு மணிநேரத்தில் சுமார் 1575 Push-ups எடுத்துச் சாதனை படைத்திருக்கிறார்.
கனடா நாட்டைச் டோனா ஜீன் என்ற பெண்மணி உடற்பயற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்கு 5 பிள்ளைகளும் 12 பேரக்குழந்தைகளும் உள்ளனர். தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட டோனா ஜீன் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று எண்ணினான். அதன் விளைவாக உடற்பயிற்சியில் சாதனை படைக்கலாம் என எண்ணி தினசரி தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.
தங்கலானே.. தங்கலானே.. இனி இதிலும் சீனாதான் நம்.1.. கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம்..
Push-ups எடுப்பதில் சாதனை படைக்க விரும்பிய அவர் தினசரி 500 Push-ups எடுத்து பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். அதன் பலனாக உலக சாதனை படைக்க விரும்பிய இந்த 59 வயது வீரமங்கை ஒரு மணிநேரத்தில் 1575 Push-ups எடுத்து உலக சாதனை படைத்திருக்கிறார். இது டோனா ஜீன் இரண்டாவது உலக சாதனையாகும்.
இந்தச் சாதனையை கின்னஸ் அங்கீகரித்துள்ளது.