இங்க உங்களுக்கு போட்டோ ஷூட் கேட்குதா..? கேரள காவல்துறை எடுத்த அதிரடி முடிவு..

By John A

Published:

கேரள மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இக்கோவிலில் இந்தியா முழுவதிலுமிருந்து மண்டல பூஜை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து, விரதமிருந்து பயபக்தியுடன் வழிபடுவார்கள்.

இந்துக்களின் புனித கோவிலாக சபரிமலை ஐயப்பன் கோவில் விளங்குகிறது. இங்கு பல்வேறு விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. 18 படிகள் மேலேறி ஐயப்பனை தரிசிப்பது என்பது காணக்கிடைக்காத ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு 60 வயதிற்கு மேல்தான் 18 படியேற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த 18 படிகள்தான் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

தங்கலானே.. தங்கலானே.. இனி இதிலும் சீனாதான் நம்.1.. கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம்..

இருமுடி அணிந்து வரும் பக்தர்கள் 18 படியேற அனுமதிக்கப்படுகின்றனர். தற்பாது சபரிமலையில் தினமும் அளவுக்கதிமான பக்தர்கள் தரிசனம் செய்வதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. மேலும் இதற்காக கேரள காவல்துறை மூலம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி பக்தர்களுக்கு உதவும் வகையிலும் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் 18 படியேறும் போது பக்தர்களுக்கு உதவுவதற்காக அப்பகுதியிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் 18 படிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 23 காவலர்கள் தங்களது வழக்கமான பணியை முடித்துவிட்டுக் கிளம்பும்போது குழுவாகச் சேர்ந்து 18 படிகளில் நின்று போட்டோ எடுத்தனர். இந்தப் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆனது. இது சர்ச்சையைக் கிளப்ப போட்டோ எடுத்த 23 காவலர்கள் மீதும் கேரள காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களை நன்னடத்தை பயிற்சிக்கு அனுப்பவும் திட்டமிட்டிருக்கிறது.