தங்கலானே.. தங்கலானே.. இனி இதிலும் சீனாதான் நம்.1.. கண்டுபிடிக்கப்பட்ட தங்கச் சுரங்கம்..

By John A

Published:

தங்கலான் படத்தில் வருவது போன்றே நிஜமாகவே ஒரு பெரிய தங்கச் சுரங்கத்தையே கண்டுபிடித்து சப்தமில்லாமல் பொருளாதாரத்தை ராக்கெட் வேகத்தில் ஏற்றிக் கொண்டிருக்கிறது சீனா. சீனாவைப் பொறுத்தவரை உலக வல்லரசுநாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. மக்கள் தொகையிலும், ராணுவத்திலும், தொழில்நுட்பத்திலும் சீனா உலக அரங்கில் மிகப்பெரிய சக்தியாக வலம் வருகிறது. கம்யூனிஸ நாடான சீனாவில் தற்போது தங்கச் சுரங்கம் கண்டறியப்பட்டுள்ளது.

இதிலிருந்து தங்கம் எடுக்கும் பணிகள் ஆரம்பமானால் உலகப் பொருளாதாரத்தில் சீனாவை மிஞ்ச யாரும் இல்லை என்னும் அளவிற்கு தங்கம் அங்கே கொட்டிக் கிடக்கிறது. உலக அளவில் தங்கத்திற்கான மார்க்கெட் எப்போதுமே குறைந்ததில்லை. தங்கம் ஆபரணத்திற்காக என்பதைக் காட்டிலும் அது பெரிய முதலீடாக இருப்பதால் தங்கத்திற்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை.

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் பாதுகாப்பு விதிகள் புறக்கணிப்பு.. மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றச்சாட்டு

இந்நிலையில் சீனாவின் கனிமவளத்துறை சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்குள்ள ஹுனான் மாகாணத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தத் தங்கத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 7 லட்சம் கோடியாகும். ஹுனான் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சூப்பர் ஜெயண்ட் என்ற பகுதியில் கண்டறியப்பட்டுள்ள இந்தத் தங்கச் சுரங்கத்தை சீன அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் தங்கமானது பூமிக்கடியில் சுமார் 2000 அடி ஆழத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மொத்த இருப்பு 300 மெட்ரிக் டன் வரை இருக்கும் என கண்டறிந்துள்ளனர். இதற்காக பூமியை ஆய்வு செய்யும் அதிநவீன கருவிகளைக் கொண்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு டன் தாது மணலில் சுமார் 137 கிராம் தங்கம் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே இங்கு சுரங்கம் தோண்டி தங்கம் பிரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப் போவதாக சீன அரசு அறிவித்திருக்கிறது.