வித்யாசாகர் இசையில் அஷ்ட ஐயப்பன் அவதாரம் பாடல் ஆல்பம்.. சும்மா ஃவைப் ஏத்துதே..

By John A

Published:

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பர் இசையமைப்பாளர் வித்யாசாகர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா என ஜாம்பவான்கள் உச்சத்திலிருந்த போதே ஜெய்ஹிந்த், கில்லி, தூள், ரன், சந்திரமுகி, அன்பே சிவம், வில்லன், தில் என வரிசையாக ஹிட் கொடுத்து உச்சத்தில் இருந்தார் வித்யாசாகர். பெரும்பாலும் வித்யாசாகரின் பாடல்கள் மெலடி, கானா, குத்து எனக் கலவையாக இருக்கும்.

மேலும் இரைச்சல் இல்லாத இசை போன்றவற்றால் வித்யாசாகரின் பாடல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்தினை வித்யசாகர் காலம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு வரிசையாக ஹிட் பாடல்களைக் கொடுத்து ரசிகர்களை முணுமுணுக்க வைத்தார்.

வெடித்த சண்டை.. ஆணவத்தில் செந்தில் சொன்ன வார்த்தை.. கோபத்தில் கவுண்டமணி செஞ்ச காரியம்..

குறிப்பாக கில்லி படத்தின் பாடல்கள் துள்ள வைக்கும், ஆட்டம் போட வைக்கும். மேலும் சந்திரமுகி, அன்பேசிவம், மொழி ஆகியவற்றில் மெலடி இசையால் மனதை வருடுவார். இப்படி ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் வித்யாசாகருக்கென தனி இடம் இருக்கிறது. 2010-ம் ஆண்டிற்குப் பிறகு அனிருத் போன்ற புதிய இசைக்கலைஞர்கள் வருகையும், சினிமாவின் போக்கும் மாறியதை அடுத்து வித்யாசாகர் குறைவான படங்களிலேயே இசையமைக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில் தற்போது ஐயப்ப பக்தர்களைத் தாளம் போட வைக்கும் வகையில் அஷ்ட ஐயப்பன் அவதாரம் என்ற பக்தி ஆல்பத்தினை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே அஷ்ட ஐயப்பன் அவதாரம் டைட்டில் பாடல் 13 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது. முதல் பாடலை திருப்புகழ் மதிவாணன் இயற்ற விஜய் பிரகாஷ் பாடியிருக்கிறார். கேரள இசையும், தமிழக இசையும் கலந்து ஐயப்பனையே அழைப்பது போன்ற இசையால் பாடலில் பக்தி மணம் பரப்பியிருக்கிறார் வித்யாசாகர். தற்போது யூடியூப் தளத்தில் அனைத்துப் பாடல்களும் கொண்ட முழு ஆல்பமும் வெளியாகி ஐயப்ப பக்தர்களிடையே வரவேற்பினைப் பெற்று வருகிறது.