விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2 வது பாகத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார்.படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். தெனம் தெனம் என்ற பாடலை அவரே பாடியுள்ளார். அவர் மனசுல என்ற பாடலை எழுதியும் உள்ளார். பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஒரு பாடல் உள்ளது. படத்திற்கான இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடந்தது. டிசம்பர் 20ல் படம் வெளியாகிறது. இந்நிலையில் ஆடியோ வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசியவற்றைப் பார்ப்போம்.
சூரியைக் கலாய்த்த இளையராஜா
சினிமாவுல கதாநாயகனா நடிச்சது காமெடியா சந்தோஷமா? எத்தனை படம் கதாநாயகனா நடிச்சிருக்கேன்னாரு. 2 படம் கதையின் நாயகனா நடிச்சிருக்கேன்னாரு சூரி. உன்னை கதாநாயகனா ஆக்குனது வெற்றிமாறன்னு சொன்னாரு இளையராஜா. ஆமாய்யா என்றார் சூரி.
கர்நாடக இசை பாடகர்
‘தெனம் தெனமும் உன் நினைப்பு’ என்ற பாடலை முதல்ல சஞ்சய் சுப்பிரமணியத்துக்குக் கொடுத்துப் பாடச் சொன்னேன். அதுக்கு வெற்றிமாறன் நீங்க பாடுங்கன்னாரு. அப்புறம் அதை நான் பாடுனேன். அவருக்கு ‘மனசுல மனசுல’ன்னு ஒரு பாட்டை எழுதிக் கொடுத்துட்டேன். அவர் பெரிய கர்நாடக இசை பாடகர். இந்தப் படத்துக்காக அழைச்சிட்டு வந்தேன்.
எதிர்பார்ப்பு
என்னுடைய எதிர்பார்ப்புக்குத் தகுந்த மாதிரி பாடல்கள் கொடுக்குறது வேற. அவங்களோட எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி பாடல்கள் கொடுக்குறது வேற. ஆகாயத்துல புள்ளி வச்ச மாதிரி தான் இருந்தது எனக்கு இந்தப் படத்துல வேலை பார்க்கும்போது. ஒரு படத்தை உருவாக்குறதும், ட்யூனை உருவாக்குறதும் கஷ்டம். முதல்ல பிளாங்கா இருக்கும்.
ஆகாயத்துல எப்படி புள்ளி?
ஆரம்பிச்சா அதுபாட்டுக்கு வந்துட்டே இருக்கும். இசையில ஆகாயத்துல எப்படி புள்ளி வைக்க முடியும். அதே மாதிரிஒரு தெலுங்கு படத்துல ஆகாயத்துல புள்ளி வச்சமாதிரி இருக்கும்னு நினைச்சேன். அதுதான் என்னோட எண்ணம். ஆகாயத்துல எப்படி புள்ளி வைப்பீங்க. அவங்க எல்லாத்தையும் எழுதிட்டு வந்துட்டாங்க. வரிசையா டியூன் பண்ண ஆரம்பிச்சேன்.
வெற்றிமாறன் புட்டேஜ்
இது என்னோட அனுபவம். எனக்கு அது வேலையே இல்லை. வெற்றிமாறன் எல்லாத்தையும் ரெகார்டு பண்றாரு. நான் பார்த்தா அப்படியே மறைக்கிறாரு. அந்த புட்டேஜ் எல்லாம் எனக்குக் கொடுங்க. அதுக்கு நல்லா பிரைஸ் (Prize) கிடைக்கும். பிரைஸ்னா பிரைஸ் (Price). ரூபா. நான் எந்த பங்ஷனுக்கும் போறது இல்லை. எல்லாரையும் பார்த்துப் பேசறதுக்கு இறைவன் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துருக்கான் என்றார் இளையராஜா.