தமிழ் சினிமாவில் தற்போது முதல் இடத்தில் இருக்கும் நடிகர் யார் என கேட்டால் நிச்சயம் பலரும் தளபதி விஜய்யின் பெயரை தான் கூறுவார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் கூட அவை வசூலில் எந்தவித குறையும் வைத்தது கிடையாது.
கோட், லியோ உள்ளிட்ட திரைப்படங்களும் கூட ஒரு பக்கம் பாராட்டுகளையும் இன்னொரு பக்கம் மோசமான விமர்சனத்தையும் அதிகம் பெற்றிருந்தது. ஆனாலும் இந்த திரைப்படங்கள் முதல் நாளிலும், மொத்தமாகவும் செய்த வசூலை மற்ற பல படங்களால் தொட முடியாமல் தான் இருந்து வருகிறது. இப்படி விஜய் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய சாம்ராஜ்யத்தையே தனது திரைப்படங்கள் மூலம் நடத்தி வரும் நிலையில் பல தயாரிப்பாளர்களுக்கும் அவர் ஃபேவரைட்டாக இருந்து வருகிறார்.
தளபதி விஜய்யின் கடைசி படம்
இதனிடையே தான் அரசியலில் முழுநேரமாக ஈடுபட இருப்பதாக கூறி தனது திரை பயணத்தை முடித்துக் கொள்வதாக விஜய் அறிவித்திருந்தார். அவரது கட்சியான தமிழக வெற்றிக் கழகமும் 2026 ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு திரைப்படத்துடன் தனது சினிமா பயணத்தை முடித்துக் கொள்கிறார் விஜய்.
இந்த திரைப்படத்தின் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ், பாபி டியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரைன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் முடிந்த அளவுக்கு தளபதி 69 படத்தை கொண்டாட வேண்டும் என்றும் ரசிகர்கள் முடிவு செய்துவிட்டனர்.
விஜய்யின் கத்தி, லியோ, பீஸ்ட், மாஸ்டர் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் தளபதி 69 ல் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். விஜய் – அனிருத் காம்போ பிளாக்பஸ்டர் ஹிட்டாக அனைத்து திரைப்படங்களில் அமைந்திருந்த நிலையில் அதே மேஜிக் விஜய்யின் கடைசி படத்திலும் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகும் என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இதற்கிடையே இந்த படத்தில் தான் இசையமைக்காமல் போனது நல்லது தான் என பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் தெரிவித்துள்ளார்.
ஜிப்ரான் சொன்ன காரணம்
ஹெச். வினோத் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் இசையமைத்துள்ள ஜிப்ரான், இது தொடர்பாக ஒரு நேர்காணலில் பேசுகையில், “பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு எப்படி அனிருத் தொடர்ந்து சமாளித்து இசையமைக்கிறார் என்பதே புரியவில்லை. ஏனென்றால் அது அவ்வளவு பெரிய நெருக்கடியான விஷயம்.
விஜய்யின் கடைசி திரைப்படத்தை வினோத் இயக்குவதாக அறிவிக்கப்பட்டதும் அனிருத் இசையமைக்கிறார் என தெரிந்ததும் ஒரு நிம்மதியே வந்துவிட்டது. ஏனென்றால் விஜய்யின் கடைசி திரைப்படம், அதன் மீதான அதீத எதிர்பார்ப்பு என பல நெருக்கடிகளுக்கு மத்தியில் நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் என்னால் அதனை சமாளிக்க முடியாது” என ஜிப்ரான் கூறியுள்ளார்.