கிரிக்கெட் போட்டிகள் என வரும்போது ஏதாவது ஒரு நாளில் ஒரு வீரர் புதிதாக செய்யும் சாதனைகள் உடைக்கப்படத்தான் போகிறது. ஒரு காலத்தில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த வீரராக சுமார் 16 ஆண்டுகள் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சயீத் அன்வர் தொடர்ந்திருந்தார். இதன் பின்னர் பல வீரர்களும் 150 ரன்கள் வரை ஒரு நாள் போட்டிகளில் அடித்தாலும் யாராலும் 200 ரன்களை தொட முடியவில்லை.
அப்படி இருக்கையில் கடந்த 2019 தென்னாபிரிக்காவிற்கு எதிராக முதல் ஆளாக ஒரு நாள் போட்டியில் 200 ரன்களை தொட்டிருந்தார் சச்சின் டெண்டுல்கர். இதனைத் தொடர்ந்து அதனையும் வரும் நாட்களில் பல வீரர்கள் முறியடிக்க, ரோகித் சர்மா, சேவாக், கெயில் என பலரும் 200 ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்திருந்தனர். இப்படி எந்த சாதனையாக இருந்தாலும் நிச்சயம் ஏதாவது ஒரு நாளில் முறியடிக்கபட தான் போகிறது என்பது கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரையில் எழுதப்படாத விதி.
7 ரன்னில் ஆல் அவுட்..
அதே போல தான் ஒரு நாள் போட்டிகளில் அல்லது டி20 போட்டிகளில் குறைந்தபட்ச ஸ்கோர் மட்டுமே எடுத்து நிறைய அணிகள் அவுட்டாவதையும் பார்த்திருப்போம். அது மிகக் குறைந்த ஸ்கோராக இருந்தாலும் நிச்சயம் அதையும் தாண்டி குறைந்த ரன்களை ஏதாவது ஒரு அணி அடிக்கும் என்றும் பலரும் எதிர்பார்த்திருக்கலாம். அப்படி ஒரு எதிர்பார்ப்பிற்கான பதிலாக தான் தற்போது ஐவரி கோஸ்ட் அணி வெறும் 7 ரன்களில் அவுட்டாகி டி20 சர்வதேச அரங்கில் மோசமான சாதனையை படைத்துள்ளது.
தற்போது உலகின் பல இடங்களில் டி20 உலக கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆப்பிரிக்காவின் துணைப்பகுதிகளில் இதற்கான போட்டிகள் நடக்கிறது. இதில் நைஜீரியா மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய அணிகள் மோதிக் கொண்டது. முதலில் நைஜீரியா அணி பேட்டிங் செய்து 271 ரன்கள் சேர்த்திருந்தது.
அதிகபட்ச ஸ்கோர் எவ்ளோ தெரியுமா..
இப்படி கடின இலக்கை நோக்கி ஆடிய ஐவரி கோஸ்ட் அணி வெறும் 7 ரன்களில் ஆல் அவுட்டாகி உள்ளது. இதனால் நைஜீரிய அணி, 264 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஐவரி கோஸ்ட் அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் அவுட்டாரா முகமது 4 ரன்கள் சேர்த்திருந்தார். 3 பேர் தலா ஒரு ரன் எடுக்க, ஆறு பேர் டக் அவுட்டாகி வெளியேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
7. 3 ஓவர்களில் வெறும் 7 ரன்களில் ஆல் அவுட்டான ஐவரி கோஸ்ட் அணி பற்றி தான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பலரும் பேசி வருகின்றனர்.