திரையுலகில் கடந்த வாரம் ஹாட் டாபிக்காக வலம் வந்தது எதுவென்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ராபானு தம்பதி பிரிவு தான். உலகெலங்கிலும் உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்களை இச்செய்தி அதிர்ச்சியடைய வைத்தது. கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டதால் திரையுலகமே அதிர்ச்சி அடைந்தது.
இந்நிலையில் இருவருமே தங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம் என்று பதிவிட்டு சுமூகமாகப் பிரிந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த நாளே மற்றொரு செய்தி இசைப் புயலைத் தாக்கியது. அது தான் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பபாளர்களின் இசைக்குழுக்களில் கிட்டார் பேசிஸ்ட்-ஆக பணிபுரியும் மோகினி டே -வின் விவாகரத்து அறிவிப்பு.
தனது காதல் கணவரான பிரபல சாக்ஸபோனிஸ்ட் மார்க் ஹார்ட்சுக்கை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இளம் வயதே ஆன மோகினிடே-வின் விவாகரத்தும், ஏ.ஆர்.ரஹ்மான்-சாய்ரா பானு தம்பதிகளின் விவாகரத்து அறிவிப்பும் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்ததால் பலர் முடிச்சுப் போட்டு செய்திகளை எழுதத் தொடங்கினர். இதனால் இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது. இந்நிலையில் சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
கோபத்தின் உச்சிக்கே சென்ற கவிஞர் வாலி.. தயாரிப்பாளரை திட்டிய தருணம்.. சமாதானப்படுத்திய எம்.ஜி.ஆர்..
அவர் சிறந்த மனிதர் என்றும், அவர் மீதான இந்த விமர்சனங்கள் வருத்தமளிக்கிறது என்றும் ஆடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பிடமிருந்தும் மோகினி டே, ஏ.ஆர். ரஹ்மான் குறித்த செய்திகள் அனைத்தையும் நீக்குமாறு சட்டபூர்வமாக அறிவிப்பு முன்னணி செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. இதனிடையே இவர்கள் இருவரும் குறித்த செய்திகள் தற்போது இணையத்திலிருந்து நீக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் இவ்விவகாரம் குறித்து மோகினி டே நேற்று வெளியிட்டுள்ள பதிவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவில் எட்டரை ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வருகிறேன். அவரை மனதளவில் என் தந்தையாகச் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய சூழல் இப்படி இருக்கும் வேளையில், எப்படி தவறாகப் பேச மனம் வருகிறது என்று தெரியவில்லை.
சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி சிலர் தவறாகக் குறிப்பிட்டிருப்பதை அறிந்து மனம் வெறுத்துப் போயிருக்கிறேன். தந்தை ஸ்தானத்தில் உள்ள ஒருவரோடு தொடர்புபடுத்தி பேசுவோரின் மனநிலை எப்படிப்பட்ட மனநிலையோ? என்று பொங்கியிருக்கிறார்.
மேலும் அதற்கு முன்னதாக தன்னை நேர்காணல் செய்வதற்கு தினம் அழைப்புகள் வருவதாகவும், அதனை நிராகரித்து வருவதாகவும், அதில் நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும் எனவும் மோகினி டே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மோகினி டே-வின் இந்தப் பதிவால் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து விவகாரம் முற்றுப்புள்ளி பெற்றுள்ளது.