டிசம்பர் மாதத்தில் மட்டும் 17 நாட்கள் வங்கி விடுமுறையா? முழு விவரங்கள்..!

By Bala Siva

Published:

 

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் சில பண்டிகை தினங்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை உள்பட எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை, சில குறிப்பிட்ட பிராந்திய விடுமுறைகள் அளிக்கப்படும் மாநிலங்கள் எவை எவை என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

1. டிசம்பர் 1: ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.

2. டிசம்பர் 3: செவ்வாய்கிழமை புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (பிராந்திய விடுமுறை)

3. டிசம்பர் 8: ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.

4. டிசம்பர் 12: வியாழக்கிழமை அன்று பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா காரணமாக ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை.

5. டிசம்பர் 14: இரண்டாவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை.

6. டிசம்பர் 15: ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை.

7. டிசம்பர் 18: புதன்கிழமை அன்று யு சோசோ தாமின் நினைவு தினத்தை முன்னிட்டு ஷில்லாங்கில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.

8. டிசம்பர் 19: வியாழக்கிழமை அன்று கோவா விடுதலை தினத்தை முன்னிட்டு கோவாவில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை.

9. டிசம்பர் 22: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை.

10. டிசம்பர் 24: செவ்வாய்கிழமை அன்று கிறிஸ்மஸ் ஈவ் அன்று ஐஸ்வால், கோஹிமாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

11. டிசம்பர் 25: புதன்கிழமை கிறிஸ்துமஸ் பண்டிகை. தேசிய விடுமுறை

12. டிசம்பர் 26: வியாழக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

13. டிசம்பர் 27: வெள்ளிக்கிழமை அன்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு சில மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

14. டிசம்பர் 28: நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு வழக்கமான விடுமுறை

15. டிசம்பர் 29: ஞாயிற்றுக்கிழமை என்பதால் வார விடுமுறை.

16. டிசம்பர் 30: திங்கட்கிழமை அன்று U Kiang Nangbah காரணமாக ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

17. டிசம்பர் 31: செவ்வாய்கிழமை அன்று புத்தாண்டு ஈவ் காரணமாக சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.