நடிகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கப்பட்ட பட்டங்களைத் துறந்து எப்போதும் போல் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இதற்கு முன்னதாக அஜீத் தன்னை தல என அழைக்க வேண்டாம் எனவும், கமல்ஹாசன் தனக்கு உலக நாயகன் பட்டம் வேண்டாம் எனவும் ரசிகர்களிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே தனது பட்டத்தைத் துறந்தவர் யார் தெரியுமா? நடிகர் சத்யராஜ் தான்.
ரெங்கராஜ் என்ற இயற்பெயரைக் கொண்ட சத்யராஜுக்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தனது அன்னையின் பெயரான சத்யபாமா என்பதலிருந்து சத்யாராஜ் என்று அழைத்தார். பின் சத்யராஜ் என்று நிலைத்தது. சட்டம் என் கையில் படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சத்யராஜ் இன்று வரை தனது திரைப்பயணத்தினைத் தொடர்ந்து வருகிறார். வில்லன், ஹீரோ, குணச்சித்திரம் என அனைத்துக் கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்குபவர். கடவுள் மறுப்புக் கொள்கை கொண்ட சத்யராஜ் திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர்.
ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பட்டம் கொடுப்பதைப் போன்று நடிகர் சத்யராஜுக்கும் புரட்சித் தமிழன் என்ற பட்டம் வழங்கப்பட்டது. திருமதி பழனிச்சாமி படத்தின் போது சத்யராஜுக்கு ரசிகர் ஒருவர் எழுதிய லெட்டரில் புரட்சித் தமிழன் சத்யராஜ் என்று எழுதியிருக்கிறார்.
புஷ்பான்னா நேஷனல்ன்னு நினைச்சியா.. இண்டர் நேஷனல்.. தமிழில் பேசிய அல்லு அர்ஜுன்
அதனைக் கண்ட பட தயாரிப்பாளர் அதற்கு அடுத்த நாள் வந்த விளம்பரத்தில் உங்கள் சத்யராஜ் என்பதற்குப் பதிலாக புரட்சித் தமிழன் சத்யராஜ் என்று போஸ்டர் போட அந்தப் படம் 100 நாட்களைக் கடந்து ஓடியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்யராஜுக்கு அடுத்து வந்த படங்கள் அனைத்திலும் புரட்சித் தமிழன் என்ற பட்டத்துடன் டைட்டில் கார்டு போடப்பட்டிருக்கிறது.
இதன்பின் அவர் அதனை வேண்டாம் என்று கூற உங்கள் சத்யராஜ் என்றே தற்போது பயன்படுத்தப்படுகிறது. பேட்டி ஒன்றில் புரட்சித் தமிழன் பட்டம் குறித்துப் பேசிய சத்யராஜ், “இந்தப் பட்டத்திற்கு நான் தகுதியானவன் அல்ல. பாதி வேண்டுமானால் உண்மை இருக்கலாம்.” என்று பேசியிருக்கிறார். மேலும் சத்யராஜுக்கு
இன்று முத்தமிழ் பேரவையின் பொன்விழா ஆண்டில் அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞர் விருதினை வழங்கி கௌரவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.