கே எல் ராகுலுக்கு இவ்ளோ தான் மதிப்பா.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. சிஎஸ்கே போட்டி போட்டும் கடைசில தட்டித் தூக்கியது யார்..

By Ajith V

Published:

ஐபிஎல் மெகா ம் ஆரம்பமாவதற்கு முன்பாகவே சி வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாக இருந்து வந்தது. அதிலும் இந்திய வீரர்கள் எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த தடவை ஏலப்பட்டியில் இடம் பிடித்துள்ளதால் அவர்களது தொகை நிச்சயம் 20 கோடியை தாண்டி எங்கோ செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் சில வீரர்கள் எதிர்பார்த்த தொகையை விட அதிக தொகைக்கு ஏலம் போய் மிகப்பெரிய சரித்திரத்தையும் தற்போது எழுதியுள்ள நிலையில் கே எல் ராகுல் போன தொகையும், அணியும் சற்று ஏமாற்றத்தையே ரசிகர்களுக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இந்த ஏலத்தில் முதல் வீரராக அர்ஷதீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி மீண்டும் தக்க வைத்திருந்தது.

அதிக தொகைக்கு போன வீரர்கள்

இதனைத் தொடர்ந்து ரபாடா, முகமது மி, சிராஜ் என பல வீரர்களும் நல்ல தொகைக்கு போக இரண்டு வீரர்கள் 20 கோடி ரூபாயை தாண்டி இருந்ததும் மற்ற சில வீரர்கள் 15 கோடியை தாண்டி இருந்ததும் அதிக பேசு பொருளாக மாறி உள்ளது. ஷ்ரேயஸ் ஐயரை 26. 75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிஷப் பந்த்தை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

இதே போல, ஜோஸ் பட்லர், டேவிட் மில்லர், சிராஜ் உள்ளிட்ட வீரர்களை குஜராத் டைட்டன்ஸ் அணி சொந்தமாக்கி இருந்தது. இதில் பட்லர் 15 கோடி ரூபாயை தாண்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல, ஒவ்வொரு முறையும் ஏலத்திற்கு முன்பாக தான் ஆடி வரும் அணியில் இருந்து விடுவிக்கப்படும் சாஹல், கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல் அணிக்காக ஆடிவந்தார்.

ஏமாற்றத்தில் ராகுல்..

இதனிடைய மெகா த்திற்கு முன்பாக அந்த அணியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை 18 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கி உள்ளது. இப்படி த்தில் போன பெரும்பாலான வீரர்கள் 10 கோடி ரூபாயை தாண்டியிருந்த நிலையில் கே எல் ராகுல் பெயர் அறிவிக்கப்பட்டதும் நிச்சயம் 20 கோடி ரூபாயை தொட்டு விடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தர்.

ராகுலை எடுப்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு உள்ளிட்ட அணிகள் போட்டி போட்டிருந்த நிலையில் கடைசியில் டெல்லி அணி அவரை 14 கோடி ரூபாய்க்கு சொந்தமாக்கி இருந்தது. Mock Auction ல் கூட 20 கோடி ரூபாயை தாண்டி இருந்த ராகுல் 15 கோடி ரூபாயை கூட நெருங்கவில்லை. அதுமட்டுமில்லாமல் அர்ஷத் தீப் சிங், சாலை விட குறைந்த தொகைக்கும் அவர் த்தில் போயுள்ளார்.

தொடக்க வீரர், விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் என பல திறமைகள் இருந்தும் எதிர்பார்த்த தொகைக்கு போகாமல் குறைந்த தொகைக்கு ராகுல் போயுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல, ராகுலை ஆர்சிபி அணி எடுக்கும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.