மாதம் ₹500 மட்டும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் லட்சாதிபதி ஆக முடியுமா?

By Bala Siva

Published:

 

மாதம் ₹500 மட்டும் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் லட்சாதிபதி அல்லது கோடீஸ்வரர் ஆகிவிடலாம் என்று சிலர் கூறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், மிகவும் அரிதாக ஒரு சில மியூச்சுவல் ஃபண்டுகள் மட்டுமே மாதம் ₹500 முதலீடு செய்யும் போது அதிக லாபம் கொடுக்கும் என்பதும் உண்மை. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகளில் மாதம் ₹500 முதலீடு செய்தால், என்பது தேவையான லட்சம் அல்லது கோடியை சேர்க்க போதுமானதாக இருக்காது என்பது தான் உண்மை.

மாதம் ₹500 முதலீடு செய்யும் பட்சத்தில், ஒரு ஆண்டிற்கு ₹6,000, 20 ஆண்டுகளுக்கு ₹1,20,000 மட்டுமே முதலீடு இருக்கும். அந்த முதலீடு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கொடுத்தால், 20 ஆண்டுகள் முடிவில் கிட்டத்தட்ட ₹5 லட்சம் சேரலாம். ஆனால், 20 ஆண்டுகள் கழித்து அந்த ₹5 லட்சம் பணவீக்கத்துடன் ஒப்பிட்டு பார்த்தால், இப்போது இருக்கும் ₹1 லட்சத்துக்கு மட்டுமே சமமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, மாதம் ₹500 மட்டும் சேமித்து 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் பணம் சேர்க்க முடியும் என்று நம்ப வேண்டாம். சேமிப்பு என்பது தொடர்ச்சியாக இருப்பது மட்டுமின்றி காலநிலைக்கு ஏற்ப உயர்ந்து கொண்டே ம் இருக்க வேண்டும். மேலும், நமது வருமானம் அதிகரிக்கிறபோது, சேமிப்பு தொகையும் அதிகரிக்க வேண்டும்.

இப்போது உங்களால் மாதம் ₹500 முதலீடு செய்ய முடிகிறது என்றால், இரண்டு ஆண்டுகள் கழித்து அதை ₹1,000 ஆகவும், அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து ₹2,000 ஆகவும் உயர்த்தி சேமிக்க வேண்டும். இப்படியாக தொடர்ச்சியாக சேமிப்பு தொகையை உயர்த்தினால் மட்டுமே கிடைக்கும் தொகை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.