ஸ்ரேயாஸ் சாதனையை 5 நிமிடங்களில் வீழ்த்திய ரிஷப் பண்ட்.. எத்தனை கோடி தெரியுமா?

By Bala Siva

Published:

ஐபிஎல் ஏலம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்திய வீரர்களில் அதிகபட்சமாக ஏலம் போனவர் ஸ்ரேயாஸ் ஐயர் என்று அறிவிக்கப்பட்ட 5 நிமிடங்களில், அதைவிட அதிகமாக ரிஷப் பண்ட் ஏலம் போயுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. ஆனால், அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ரிஷப் பந்த் இந்த சாதனையை முறியடித்து 27 கோடிக்கு ஏலம் போனார். அவரை லக்னோ அணி ஏலம் எடுத்துள்ளது.

டெல்லி அணி கடைசி வரை போட்டி போட்டுக் கொண்டு வந்த நிலையில், 27 கோடி என்று ஏலம் போன போது டெல்லி விலக, லக்னோ அணி ரிஷப் பந்தை தங்கள் அணியில் இணைத்ததை உறுதி செய்தது.

இதுவரை ஐபிஎல் வீரர்கள் ஏலம் போனது குறித்த விவரங்கள் இதோ.

சாஹலை 18 கோடி ரூபாய்க்கு எடுத்தது பஞ்சாப் அணி

டேவிட் மில்லரை ரூ.7.5 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது லக்னோ அணி

முகமது ஷமியை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் வாங்கியது சன்ரைசர்ஸ்

மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி

ரூ.10.75 கோடிக்கு தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா குஜராத் அணியால் வாங்கப்பட்டுள்ளார்

அர்ஸ்தீப் சிங்கை 18 கோடி ரூபாய்க்கு RTM கார்டு மூலம் பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது