கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் இருந்தும்.. எந்த தொடக்க ஜோடிக்கும் வராத தைரியம்.. சரித்திரம் படைத்த ராகுல் – ஜெய்ஸ்வால்..

By Ajith V

Published:

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடியதோ அதற்கு அப்படியே நேர்மாறான ஒரு ஆட்டத்தை இரண்டாவது இன்னிங்ஸில் அவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டிலேயே அதிகம் உற்று நோக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் தொடரான பார்டர் கவாஸ்கர் டிராபித் தொடர் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் ஆரம்பமாகியுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதன் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டு வரும் நிலையில் டாஸ் வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்திருந்தார். அந்த வகையில் ஆடியிருந்த இந்திய வீரர்கள், மிக மோசமான ஒரு பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தனர்.

அசர வைத்த ராகுல்ஜெய்ஸ்வால்

தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறி போது நிதிஷ் மற்றும் ரிஷப் பந்த் உதவியுடன் 150 ரன்களைத் தொட்டிருந்தது இந்திய அணி. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி அதிக ரன் குவித்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்த்தால் பும்ரா, சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோரின் உதவியுடன் 104 ரன்களில் ஆல் அவுட்டாகி இருந்தனர். சொந்த மண்ணிலேயே ஆஸ்திரேலியாவின் தடுமாற்றத்திற்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய பங்கு வகித்திருந்தனர்.
Rahul and Jaiswal

இதன் பின்னர் 46 ரன்கள் முன்னிலையுடன் ஆடத் தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 172 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் இப்படி ஒரு பார்ட்னர்ஷிப்பை தொடக்க ஜோடி அமைப்பது மிகப்பெரிய ஒரு சம்பவமாக பார்க்கப்படும் நிலையில் அதற்கு காரணமாக இருந்து வரும் ஜெய்ஸ்வால் மற்றும் ராகுல் ஆகிய இருவரையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த 3 பேர் இருந்தும் இப்படி ஒரு சாதனையா..

ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் நிற்க இந்திய அணி 218 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது. இன்னும் மூன்று நாட்கள் மீதம் இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணியின் கையே தற்போது ஓங்கி இருப்பதாக தெரிகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தடுமாற்றத்தை கண்டாலும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தி வரும் இந்திய அணியை தற்போது பலரும் மிரண்டு தான் பார்த்து வருகின்றனர்.

மேலும் கே. எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இணை பல சாதனைகளை ஆஸ்திரேலிய மண்ணில் படைத்து வரும் நிலையில் அதில் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி தற்போது பார்க்கலாம். ஆஸ்திரேலியாவின் மிரட்டலான வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கும் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் ஆகிய மூன்று பேர் இருந்தபோது எந்த எதிரணியின் தொடக்க ஜோடியும் 150 க்கு மேற்பட்ட ரன்களை டெஸ்டில் பார்ட்னர்ஷிப்பாக அமைத்ததில்லை.
Jaiswal vs Starc

ஆனால் அந்த மூன்று பேர் இருந்தும் முதல் முறையாக எதிரணியின் தொடக்க ஜோடி 150 ன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்ள் என்ற பெருமை ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மூலம் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.