வெறும் 3% வட்டி.. ரூ.10 லட்சம் வரை கல்விக்கடன்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

By Bala Siva

Published:

 

வெறும் 3% வட்டியில் 10 லட்சம் ரூபாய் வரை கல்வி கடன் பெற்றுக் கொள்ளும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தை ஏழை, எளிய மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏற்கனவே பல வங்கிகள் கல்விக்கான கடன் வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மத்திய அரசு பிஎம் வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் உள்ள 860 கல்வி நிறுவனங்களில் கல்வி கற்க மாணவர்களுக்கு குறைந்த வட்டியில் கல்வி கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், கல்வி கடன் பெறுவதற்கு மாணவரின் குடும்பத்திற்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும். மூன்று சதவீத வட்டி மட்டுமே விதிக்கப்படும் என்றும், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடனை மாணவர்கள் படித்து முடித்த பின்னர் ஒரு ஆண்டுக்கு பிறகு திரும்ப செலுத்த தொடங்கினால் போதும். பொருளாதார காரணங்களுக்காக, ஒரு மாணவருக்கு கல்வி மறுக்கப்படக்கூடாது என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே, இந்த சூப்பரான திட்டத்தை மாணவர்கள் பயன்படுத்தி, தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்த கடனுக்கு விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.