Dhanush divorce case | சென்னை கோர்ட்டில் தனியாக பேசிய நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா.. வரும் 27ம் தேதி தீர்ப்பு

By Keerthana

Published:

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இருதரப்பிடமும் கையெழுத்து பெற்ற பின் வழக்கில் வரும் நவம்பர் 27 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், இயக்குனர் கஸ்தூரிராஜா இளைய மகன் நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது. சுமார் 18 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி, 2022ம் ஆண்டு இருவரும் பரஸ்பரம் பிரிந்து செல்வதாக அறிவித்தனர். முறைப்படி நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்கப்போவதாகவும் கூறினார்கள்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில் 2004ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்,.. சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கில் விசாரணைக்கு தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் கடந்த 3 முறையாக் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஸ்வர்யா, நடிகர் தனுஷ் இன்று ஆஜராகி இருந்தனர்.

அப்போது, நடிகர் தனுஷ் தரப்பில், வழக்கறிஞர் கெளதம் S ராமன், ஐஸ்வர்யா தரப்பில், வழக்கறிஞர் இளம்பாரதி ஆஜராகியிருந்தனர். பின்னர் நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் வழக்கு தொடர்பாக தனியாக பேசி முடிவெடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்கள். சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர், தாங்கள் பிரிந்து வாழவே விரும்புவதாக நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் தெரிவித்தார்கள்.. இது தொடர்பாக இருதரப்பிடமும் கையெழுத்து பெற்ற பின் வழக்கில் வரும் நவம்பர் 27 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்ததுடன் வழக்கினை தள்ளி வைத்தார்.