பிஎஸ்என்எல் அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான திட்டங்களை அறிவித்து வரும் நிலையில் தற்போது 26 நாள் வேலிடிட்டி மற்றும் 26 ஜிபி டேட்டா உடன் கூடிய ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சமமாக போட்டி போட்டு வரும் மத்திய அரசின் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த சில மாதங்களாக சிறப்பான திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருவதால் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் உயர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்தியாவிலேயே மிகவும் குறைவான ரீசார்ஜ் திட்டம் மற்றும் 4ஜி இன்டர்நெட் உள்பட பல வசதிகளை செய்து கொடுத்திருக்கும் பிஎஸ்என்எல் தற்போது வெறும் 153 ரூபாய் ரீசார்ஜ் பிளானில் 26 நாள் வேலிடிட்டி மற்றும் 26 ஜிபி டேட்டா என்ற சலுகையுடன் அறிவித்துள்ளது.
153 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 26 நாட்களுக்கு 26ஜிபி டேட்டா நன்மையையும் பெற்றுக் கொள்ளலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. ஒருவேளை 26 ஜிபி முடிந்துவிட்டால் 40Kbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
26 நாள் வேலிடிட்டி தினமும் ஒரு ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் என்பது வெறும் 153 ரூபாயில் கிடைப்பதால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.