தமிழ் சினிமாவில் ஏராளமான இயக்குனர்கள் முன்னணி இடத்தில் இடங்களில் இருந்து வரும் நிலையில் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் சிறந்த திறன் படைத்தவர்களாக இருந்து வருகின்றனர். உதாரணத்திற்கு லோகேஷ் கனகராஜ் என எடுத்துக் கொண்டால் கமர்சியல் திரைப்படங்களை மிக வித்தியாசமாக புது விதமான சண்டை காட்சிகளுடன் உருவாக்குவதால் அவரது படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இப்படி பல இயக்குனர்களுக்கும் தனித்திறனுடன் இருக்கும் நிலையில் அந்த வரிசையில் மிக முக்கியமான இடத்தில் இருப்பவர் தான் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது திரைப்படத்தில் வசனங்கள் மிக குறைவாக இருப்பதுடன் அதில் காதல் கலந்து மிக நேர்த்தியாக இயக்கப்பட்டிருப்பதும் சிறப்பம்சமானதாக பார்க்கப்படுகிறது.
காதல் நிறைந்த கெளதம் வாசுதேவ் மேனன்
கௌதம் வாசுதேவ் மேனன் திரைப்படம் வருகிறது என்றாலே அதில் ஆக்சன், காமெடி உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் தாண்டி காதல் அதிகமாக இருக்கப் போகிறது என்று அர்த்தம். அதேபோல அவரது திரைப்படங்களில் இடம்பெறும் பாடல்களும் கூட மிக கவித்துவமாக இருப்பதால் பலரின் ஃபேவரைட் இயக்குனராக கௌதம் மேனன் இருந்து வருகிறார்.
மாதவன், விவேக் மற்றும் அப்பாஸ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான மின்னலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான கௌதம் வாசுதேவ் மேனன், அதன் பின்னர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை அறிந்தால், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். தொடர்ந்து துருவ நட்சத்திரம் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள கௌதம் மேனன், மலையாளத்தில் மம்மூட்டியை முன்னணி நாயகராக வைத்து ஒரு திரைப்படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
நடிக்க மறுத்த மாதவன்
இதற்கிடையே அவரது முதல் திரைப்படத்தில் நாயகனாக நடித்த மாதவன் அதன் பின்னர் அவருடன் இணைய வாய்ப்பு இருந்தும், அதனை ஏற்காமல் மறுத்தது தொடர்பான செய்தியும் அதற்கு பின்னால் உள்ள நெகிழ்ச்சியான காரணம் என்ன என்பதையும் தற்போது பார்க்கலாம். மின்னலே படத்திற்கு பிறகு தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ‘காக்க காக்க’.
சூர்யா, ஜோதிகா, ஜீவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாகி இருந்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்களும் சக்கை போடு போட்டிருந்தது. ஆனால் முதலில் இந்த திரைப்படத்தில் மாதவனை தான் நடிக்க வைப்பதற்காக கௌதம் வாசுதேவ் மேனன் முயன்றார் என கூறப்படுகிறது.
கவுதம் மேனனுக்காக செஞ்ச தியாகம்
இந்த வாய்ப்பை ஏற்க மறுத்த மாதவன், மீண்டும் நாமே இணைந்து கொண்டிருந்தால் மற்ற நடிகர்கள் உங்களை அங்கீகரிக்க மாட்டார்கள் என்றும் வேறு நடிகர்களுடன் நீங்கள் பணியாற்றும் போது தான் உங்களுக்கான வாய்ப்பு நிறைய கிடைக்கும் என்றும் கெளதம் வாசுதேவ் மேனனிடம் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வேறு நடிகர்கள் நடிக்க மறுத்தால் நான் நடிக்கிறேன் என்றும் மாதவன் வாக்கு கொடுத்துள்ளார்.
இறுதியில் அந்த படத்தில் சூர்யா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. காக்க காக்க திரைப்படம் இன்றளவிலும் பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கான வாய்ப்பு கிடைத்தும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அந்த வாய்ப்பை மாதவன் மறுத்ததும் அதற்கு பின்னால் உள்ள காரணமும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்து வருகிறது.