நயன்தாராவின் அடுத்த பதிவு.. இதுல என்ன சொல்லிருக்காங்க தெரியுமா?

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக நயன்தாரா நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் படக் காட்சியை சில நொடிகள் பயன்படுத்த தன்னிடம் ரூ.10 கோடி கேட்பதாக பதிவு…

Nayanthara

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் நெட்பிளிக்ஸ் இணையதளத்தில் கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டது. முன்னதாக நயன்தாரா நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் படக் காட்சியை சில நொடிகள் பயன்படுத்த தன்னிடம் ரூ.10 கோடி கேட்பதாக பதிவு ஒன்றைப் போட்டிருந்தார். இந்த பதிவு தமிழ்த் திரையுலகில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆனால் இதுகுறித்து தனுஷ் இன்று வரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மேலும் விக்னேஷ் சிவன் அந்த குறிப்பிட்ட காட்சியை பகிர்ந்து தனுஷை சீண்டியிருந்தார்.

இப்படி நயன்தாரா-தனுஷ் விவகாரம் திரையுலகில் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் Nayanthara: Beyond the Fairy Tale என்ற ஆவணப் படம் வெளியானது. இதில் நயன்தாராவின் பயோபிக் இடம்பெற்றிருந்தது. மேலும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோவும் இடம்பெற்றுள்ளது. இதற்கு நெட்பிளிக்ஸ் தளத்தில் போதிய வரவேற்பு இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தனுஷை விமர்சித்த வேளையில் தற்போது மீண்டும் ஒரு பதிவிட்டிருக்கிறார் நயன்தாரா. அதில் தனது திருமண ஆவணப் படத்தில் காட்சிகளைப் பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் தந்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் “உங்களை அணுகியபோது எந்தவித தயக்கமோ, தாமதமோ இல்லாமல் தடையில்லா சான்று வழங்கியதை என்றென்றும் நன்றியோடு நினைவில் வைத்துக் கொள்வேன்” – என்று நயன்தாரா குறிப்பிட்டிருக்கிறார்.

AR Rahman | ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு

இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நயன்தாரா நடித்துள்ள அனைத்துப் படங்களின் தயாரிப்பாளர்களின் பெயர்களையும், அதன் நிறுவனப் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார் நயன்தாரா. பாலிவுட்டில் ஷாரூக்கானுக்கு முதலில் நன்றி தெரிவித்துள்ள அவர், அடுத்து தமிழில் முதன் முதலாக அறிமுகமான ஐயா திரைப்படத்தினை தயாரித்த கே. பாலச்சந்தரின் நிறுவனமான கவிதாலயா நிறுவனத்தில் ஆரம்பித்து லைகா, ஏஜிஎஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ், ஐசரி கணேஷ், சிவாஜி புரடக்ஷன்ஸ், ஸ்டுடியோ கிரீன் என தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.

தற்போது ராக்காயி படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.