இளையராஜா இசையில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடிய எல். ஆர். ஈஸ்வரி.. தொடர்ந்து பாட முடியாமல் போன காரணம் என்ன..

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பாடகர்களைத் தாண்டி அந்த காலத்து பாடகர்கள் இன்றளவிலும் அதிகமாக பெயரெடுத்து வருகிறார்கள். இதில் வாணி ஜெயராம், ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், ஜானகி, எஸ்.பி பாலசுப்ரமணியம், யேசுதாஸ் என பலரது…

LR Eswari and Ilaiyaraaja

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள பாடகர்களைத் தாண்டி அந்த காலத்து பாடகர்கள் இன்றளவிலும் அதிகமாக பெயரெடுத்து வருகிறார்கள். இதில் வாணி ஜெயராம், ஆஷா போஸ்லே, லதா மங்கேஷ்கர், ஜானகி, எஸ்.பி பாலசுப்ரமணியம், யேசுதாஸ் என பலரது குரலை அடுக்கி கொண்டே போனாலும் இவற்றில் இருந்து வேறுபட்டு தனது வசீகர குரல் மூலமும் கவனம் ஈர்த்தவர் தான் பிரபல பாடகி எல். ஆர். ஈஸ்வரி.

ஒரு பக்கம் கிளாமரான பாடல்களுக்கும் தனது குரல் மூலம் ரசிகர்கள் மத்தியில் குதூகலத்தை உருவாக்கிய எல். ஆர். ஈஸ்வரி, இன்னொரு பக்கம் அப்படியே நேர்மாறாக ஆன்மீக பாடல்களிலும் தனது குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார். அனைத்து பாடல்களிலும் அவரது குரல் ஒரே போல இருந்தாலும் அதன் சூழலுக்கேற்ப மாற்றி பாடுவதில் கில்லாடியான எல். ஆர். ஈஸ்வரி, தமிழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக கூட திரைப்பட பாடல்களை பாடி அசர வைத்திருந்தார்.

கோவில்களில் எல். ஆர். ஈஸ்வரி குரல்

பட்டத்து ராணி, முத்துக்குளிக்க வரீகளா, எலந்த பழம் என ஒரு காலத்தில் ஈஸ்வரி பாடிய திரைப்பட பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி இருந்ததுடன் மட்டுமல்லாமல் அவரது குரலில் ஆன்மீக பாடலும் பல கோவில்களில் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். அதே போல தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என மொத்தம் பத்து மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடியுள்ள எல். ஆர். ஈஸ்வரியின் புகழ் இனியும் பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் என்றும் கருதப்படுகிறது.
L. R. Eswari

ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த அனைத்து இசையமைப்பாளர்களுடனும் ஏராளமான ஹிட் பாடல்கள் பாடியுள்ள ஈஸ்வரி, இசைஞானி இளையராஜா இசையமைப்பில் ஒரே ஒரு பாடலை மட்டும் தான் பாடியுள்ளார். நல்லதொரு குடும்பம் என்ற சிவாஜி நடிப்பில் உருவான திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த நிலையில், ஒன் டூ சாச்சா என ஆரம்பமாகும் பாடலை தான் எல். ஆர். ஈஸ்வரி தான் பாடியிருப்பார்.

இன்று வரையிலும் இளையராஜா இசையமைத்து வந்தாலும் கடந்த 45 ஆண்டுகளாக வேறு எந்த பாடல்களையும் அவரது இசையில் பாடாமல் இருந்து வருகிறார் ஈஸ்வரி. இதனால் அவர்களுக்குள்ளே ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்ற கருத்தும் பரவலாக ஒரு காலத்தில் இருந்து வந்தது. இதற்கிடையே தான் இது தொடர்பாக ஒருமுறை இளையராஜாவுக்கும், ஈஸ்வரிக்கும் சண்டை என பயங்கரமாக பத்திரிகைகளில் எழுதப்பட்டிருந்தது.
Ilaiyaraaja

இசைஞானி இசையில் பாடாத ஈஸ்வரி

அந்த சமயத்தில், ராஜாவின் சகோதரரான கங்கே அமரனிடம் இது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் தெரிவித்தவர், அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சரியான சந்தர்ப்பமும், சூழலும் அமையாததால் தான் அவர்கள் இருவரும் பின்னர் இணையவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தார். இதே போல சங்கர் கணேஷ் இசையிலும் எல். ஆர். ஈஸ்வரி பாடாமல் இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்த, அவர்கள் இருவரும் இணைந்து தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அதற்கான சூழல் அமையாததால் தான் பாடவில்லை என்றும் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.