இந்த சீன் வைக்காதீங்க..! ரஜினி படத்தில் நடிக்க மறுத்த லேடி சூப்பர் ஸ்டார்..

லேடி சூப்பர் ஸ்டார் என்றதும் நீங்கள் நயன்தாராவைத் தானே நினைத்தீர்கள்.. அதுதான் தவறு.. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. சென்னையில் பிறந்து வளர்ந்த விஜயசாந்தி தமிழில் பாரதிராஜா இயக்கிய…

Vijayashanthi

லேடி சூப்பர் ஸ்டார் என்றதும் நீங்கள் நயன்தாராவைத் தானே நினைத்தீர்கள்.. அதுதான் தவறு.. லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. சென்னையில் பிறந்து வளர்ந்த விஜயசாந்தி தமிழில் பாரதிராஜா இயக்கிய கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அறிமுகமானார்.

அதன்பின் தெலுங்கு சினிமா இவரை வாரிக்கொள்ள நடிகர்களுக்கு இணையாக சண்டைக் காட்சிகளில் பறந்து பறந்து ஸ்டண்ட் செய்தார். இதனால் இவரது படங்கள் ஆந்திராவில் சூப்பர் ஹிட் ஆக ஆரம்பித்தது. இதனையடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்கள் இவருக்குப் பட்டம் கொடுத்தனர். தமிழில் என்றும் இவருக்குப் பெயர் சொல்லும் படமாக அமைந்தது மன்னன் திரைப்படம்.

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மன்னன் படத்தில் அப்போதைய நீலாம்பரியாக நடித்து தூள் கிளப்பினார் விஜயசாந்தி. படையப்பா நீலாம்பரிக்கு முன்னோடி மன்னன் சாந்தி கதாபாத்திரத்தைக் கூறலாம். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் பவர்ஃபுல் கதாபாத்திரமாக இருக்கும். இப்படம் 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

திரையரங்க வளாகத்தில் யூடியூபர்கள் பேட்டிகளுக்கு தடை.. அதிரடி தீர்மானம் நிறைவேற்றிய தயாரிப்பாளர்கள் சங்கம்

படத்தில் கவுண்டமணி-ரஜினி காமெடி, விஜயசாந்தியின் மிரட்டல் நடிப்பு ஆகியவை பலம் சேர்த்தது. இன்றளவும் இந்தக் காமெடி டிரண்டிங்கில் இருக்கும் ஒன்று. மன்னன் படத்திற்காக நடிகை விஜயசாந்தியிடம் கேட்ட போது, அப்போது அவர் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரிடம் பி.வாசு கதை கூறிய போது ஒரு காட்சியைக் கேட்டு நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் விஜயசாந்தி.

அந்தக் காட்சி தான் சூப்பர் ரஜினிகாந்தை கன்னத்தில் அறைவது. ரஜினியை எப்படி நான் அடிப்பது போன்ற காட்சியில் நடிப்பது என்று தயங்கி அந்தப் படத்தினை வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் பி.வாசு அவரிடம் அங்கிருந்துதான் கதையே தொடங்குகிறது. எனவே இந்தக் காட்சி கண்டிப்பாக தேவை என்று கூறவே தயங்கியபடியே ஓகே சொல்லியிருக்கிறார். அதன்பின் மன்னன் படத்தில் குறிப்பிட்ட அந்தக் காட்சியில் ரஜினியை அடிப்பது போன்று நடித்திருப்பார் விஜயசாந்தி. பதிலுக்கு ரஜினியும் அவரை 3 முறை அறைவார்.

விஜயசாந்திக்கு தமிழில் இப்படம் பெயர் சொல்லும் படமாக விளங்கியது. மேலும் கவுண்டமணி இவரிடம் பயந்து கெஞ்சும் காட்சிகள் அனைத்தும் வயிற்றை சிரிப்பால் பதம் பார்க்கும். இப்படி படம் முழுக்க விஜயசாந்தி ராஜ்ஜியமே நிறைந்திருக்கும். மேலும் சண்டிராணியே பாடலிலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்ற ஒருவித திமிரோடு தான் விஜயசாந்தி நடித்திருப்பார்.