நமது உடலின் நரம்பு மண்டலத்தின் முக்கிய அங்கமாக மூளை விளங்குகிறது. மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் கட்டளைகள் அனைத்தையும் செய்வது தான் நரம்பு மண்டலத்தின் பிரதான பணியாக உள்ளது. இதனால் தான் யாராவது வேலையில் தவறு செய்துவிட்டால் மூளை இல்லாதவனே என்று திட்டுவது வழக்கம். பொதுவாக மூளைக்கு அடிக்கடி ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டே இருந்தால் தான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். ஆனால் நம்மையும் அறியாமல் சில பழக்கவழக்கங்கள் நம்மிடம் குடி கொண்டிருக்கும் இந்தப் பழக்கங்கள் மூளையை இலகுவாகப் பாதிக்கிறது.
காலை உணவினைத் தவிர்ப்பது..
நம்மில் பெரும்பாலானோர் அவரச கதியில் இயங்கியும், டயட் கடைப்பிடிக்கிறேன் என்றும் காலை உணவினை தவிர்க்கின்றனர். காலை உணவினை தவிர்க்கும் போது வயிற்றில் கெட்ட அமிலங்கள் உருவாகிறது. இதனால் உடலில் சர்க்கரை குறையும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும், ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளையின் கெடுதலுக்கு ஊக்குவிக்கும்.
வயிறுமுட்டச் சாப்பிடுவது
எப்பவும் சாப்பிடும் போது முக்கால் வயிறு சாப்பிட்டு கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். இதுதான் முறை. நன்றாக இருக்கிறது என ஒருபுடி பிடித்தால் ரத்தநாளங்கள் இறுகி, மூளையின் சக்தியை குறைய வைக்கும்.
இனிப்புப் பிரியர்கள்
நிறைய செயற்கை இனிப்பினை சாப்பிடுவதால் புரோட்டின் உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படுத்தும்.
உணவு மட்டுமல்ல.. இனி சினிமா டிக்கெட்டும் புக் செய்யலாம்.. ஜொமைட்டோவின் புதிய செயலி..!
தூக்கமின்மை
இதனை சொல்லவே வேண்டாம். ஒரு இரவு சரியாகத் தூங்காமல் இருந்தாலே மறுநாள் மூளை எப்படி இருக்கும் என்று அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும். மூளை எனக்கு ஓய்வு கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்கும். சரிவர தூங்காமல் இருப்பது மூளைச் சோர்வுக்கு வழிவகுக்கும்.
மாசான காற்று
மாசு நிறைந்த காற்றினை நாம் சுவாசிக்கும் போது நமக்குத் தேவையான ஆக்சிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை ஏற்படுகிறது. இதனால் மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மூளை பாதிப்படையும்.
புகைப்பிடித்தல்
மது, புகைப் பழக்கம் அனைத்து நோய்களுக்கும் முதல்படி. இது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் எதிரி. மூளையில் ஞாபக மறதியை ஏற்படுத்தும்.
மூளைக்கு வேலை கொடுக்காமல் இருப்பது
மூளைக்கு வேலை கொடுக்காமல் யோசிக்காமல் அல்லது ஏதேனும் பணியில் ஈடுபடாமல் இருந்தாலும் மூளை நாளுக்கு நாள் தனது செயல்திறனைக் குறைக்கும். அதிகமாக மூளையை பயன்படுத்துதால் சிந்தனைத்திறன் அதிகரித்து மூளையில் புது இணைப்புகள் உருவாகி மூளை வலிமை அடைகிறது.
மேலும் தூங்கும் போது தலையை போர்த்தித் தூங்குவதால் நாம் வெளிவிடும் கார்பன்டைஆக்ஸைடு வெளியேறாமல் இதனால் சுவாசிக்கும் போது ஆக்சிஜன் குறைந்து மூளையைப் பாதிக்கிறது.
மேலும் ஆக்கப் பூர்வமான பேச்சு, ஓய்வு நேரங்களில் பிற வேலைகளில் ஈடுபடுதல் போன்றவற்றாலும் மூளை தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கும்.
இனி இதெல்லாம் மாற்றிப் பாருங்க. உங்கள மூளை இல்லாதவனேன்னு திட்ட மாட்டாங்க..