சினிமாவட்டாரங்கள் சமூக வலைத்தளங்கள் என அனைத்திலும் பேசப்படும் ஒருவரும் ஒரே விஷயம் நயன்தாரா தனுஷ் விவகாரம் தான். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவதற்கும் காதல் மலர்ந்தது நானும் ரவுடிதான் என்ற படத்தின் மூலமாகத்தான்.
அதனால் இவர்களது திருமண வைபவம் மற்றும் காதல் கதை கொண்ட டாக்குமெண்டரியை Netflix இல் வெளியிடும்போது அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷிடம் NOC சர்டிபிகேட் கேட்டிருக்கின்றனர். ஆனால் தனுஷ் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார். இதைத்தான் குற்றச்சாட்டாக வைத்திருந்தார் நயன்தாரா.
ஆரம்பத்தில் நயன்தாராவுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஒவ்வொரு விஷயம் வெளிவர வர தனுஷின் மீது தவறில்லை என்று பலர் தனுஷின் பக்கம் சாய ஆரம்பித்து விட்டனர். ஏனென்றால் நீங்களும் காசு வாங்கிவிட்டு தான் உங்களது டாக்குமெண்டரியை Netflix இற்கு கொடுக்கிறீர்களோ அதே போல் தனுஷ் அவர் படத்திற்கும் காசு கேட்ப்பார் என்று கூறினார். பல பிரபலங்கள் இந்த விவகாரத்துக்கு குரல் கொடுக்கும் வரும் நிலையில் தற்போது RJ பாலாஜியும் இந்த விஷயத்தை பற்றி ஒரு கருத்தை கூறியிருக்கிறார்.
RJ பாலாஜி கூறியது என்னவென்றால் ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அதேபோல் கூட்டத்தாடி இரண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம். எனக்கு நயன்தாராவையும் தெரியும் தனுஷையும் தெரியும். இருவருமே மிகப்பெரிய நடிகர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். இந்த பிரச்சினையை சட்டரீதியாக அவர்களே பார்த்துக் கொள்வார்கள். இதில் பொது மக்களாகிய நாம் சொல்வதற்கு எதுவுமே இல்லை என்று கூறியிருக்கிறார் RJ பாலாஜி.