Notepad-ல் நாம் எழுதும் கண்ட திருப்தியாக இல்லை என்றால், உடனே AI மூலம் அதை ரீரைட் செய்து கொள்ளலாம். AI டெக்னாலஜி வருவதற்கு முன்பு, Word Tune என்ற ஒரு இணையதளம் இருந்தது. அதில் போய் நாம் ஒரு கண்டன்ட் கொடுத்தால், அதை சில மாற்றங்கள் செய்து தரும். ஆனால் தற்போது AI வந்த பிறகு பெரும்பாலும் Chatgptயில் தான் கண்டன்ட் ரீரைட் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது Notepad மூலமாகவே கண்டன்ட்டை ரீரைட் செய்து கொள்ள முடியும் என்ற வசதி வந்துள்ளது. இப்போதைக்கு இந்த வசதி விண்டோஸ் இன்சைடர், அதாவது பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் கிடைத்து வருவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த வசதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த வசதி வந்தவுடன், மிக எளிதில் ஒரு கண்டன்ட்டை Chatgpt போன்ற டெக்னாலஜி போலவே Notepad மூலம் ரீரைட் செய்து கொள்ளலாம் என்று கூறப்படுவது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.