இந்தப் பாட்டை கண்டிப்பா பி.சுசீலாதான் பாடணும்.. ஏ.ஆர். ரஹ்மானிடம் கண்டிஷன் போட்ட வைரமுத்து..

By John A

Published:

இசைக்குயில் பி.சுசீலாவைப் பற்றி சொல்லத் தேவையில்லை. தேனினினும் இனிமையான பல காலத்தால் அழியாத காவியப் பாடல்களைப் பாடி ரசிகர்கள் நெஞ்சில் ரீங்காரமிட வைப்பவர். மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடிய பி.சுசீலா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சில பாடல்களைப் பாடியிருக்கிறார். அவற்றில் இன்றும் மெலடி சூப்பர் ஹிட் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல் தான் கண்ணுக்கு மை அழகு.. கவிதைக்குப் பொய் அழகு.. அவரைக்குப் பூ அழகு.. அவருக்கு நான் அழகு.. பாடல்.

தெளிந்த நீர் போல பரிசுத்தமான குழந்தை மனம்.. விஜய் சொன்ன குழந்தைகள் தின வாழ்த்துச் செய்தி..

இந்தப் பாடலை பி.சுசீலாவைத் தவிர இவ்வளவு அழகாக வேறு பாடகர்கள் பாடியிருப்பார்களா என்பது சந்தேகமே. புதிய முகம் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ரேவதிக்கும், கஸ்தூரிக்கும் அழியாப் புகழ் கொடுத்த பாடலாக அமைந்திருக்கிறது. கஸ்தூரிக்கு பி.சுசீலாவின் குரலும், ரேவதி பாடலில் உன்னிமேனனும் ஹீரோவுக்குப் பாடியிருப்பார்கள். இந்தப் பாடலை வைரமுத்து எழுதியவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இந்தப் பாடலை கண்டிப்பாக பி.சுசீலா தான் பாட வேண்டும் என்று சொன்னாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்று கேட்க, இந்தப் பாடலில் அழகு அழகு என பல முறை தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் ‘ழ’ என்ற எழுத்து இடம்பெற்றுள்ளது. எனவே தமிழில் பாடல்களில் ‘ழ’ கர உச்சரிப்பை பி.சுசீலா அம்மாவைப் போல் பாடுவதற்கு அவருக்கு நிகர் அவரே. எனவே இந்தப் பாடலை எழுதும் போது அவர்தான் கண்டிப்பாக பாட வேண்டும் என்று நினைத்து எழுதினேன் என்று வைரமுத்து கூறியிருக்கிறார்.

அவர் கூறியபடியே, பி.சுசீலாவின் குரலில் கண்ணுக்கு மை அழகு பாடல் பதிவு நடைபெற்றது. இப்பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. தமிழில் மிகச்சிறந்த மெலடிகளை எடுத்துக் கொண்டால் இந்தப் பாடலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும்.