உங்க பாஸ்வேர்டு என்ன? 12345 எத்தனை பேரு வச்சிருக்காங்க தெரியுமா?

By John A

Published:

எப்போது நாம் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்தோமோ அன்றிலிருந்தே நமது தனிப்பட்ட தகவல்களை எல்லாம் யாரோ ஒருவர் கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது நாம் அனைவருமே அறிந்த விஷயம். என்னதான் நம் மின்னஞ்சல் மற்றும் வங்கி உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் விதவிமான பாஸ்வேர்ட்டை வைத்திருந்தாலும் ஹேக்கர்கள் எப்படியாவது தட்டித் தூக்கி விடுகின்றனர். ராணுவ ரகசியங்களையே ஹேக் செய்யும் அளவிற்கு டிஜிட்டல் திருடர்கள் நிறைய உள்ளனர்.

இப்படி இருக்கையில் நாம் வைத்திருக்கும் பாஸ்வேர்டு எவ்வளவு பாதுகாப்பானது, பொதுவாக வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள் என்ன என்பது குறித்து NORDPASS என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வின் முடிவில் இணையப் பயனர்கள் தங்களது ரகசியக் குறியீடுகளை பெரும்பாலும் 123456 என்றே வைத்துள்ளனராம். சுமார் 30,18,050 பேர் தங்களது Password-ஐ 123456 என்று வைத்துள்ளனராம். மேலும் சில அறிவு மேதாவிகள் மறந்து விடாமல் இருக்கவும், புதிதாக யோசிக்கிறேன் என்று Password என்பதனையே Password-ஆக வைத்திருக்கின்றனர்.

சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் இளைஞர் உயிரிழப்பு.. முறையான சிகிச்சை இல்லை என குற்றச்சாட்டு..

உலகம் முழுக்க 44 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் ஒரு நொடிக்குள் பலரது பாஸ்வேர்டுகளை ஹேக் செய்ய முடிவதாகவும் என்ற அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது அந்த ஆய்வின் முடிவு. பொதுவாக இணையம் மற்றும் சமூக ஊடகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உள்நுழைவுகளுக்கு ஒரே மாதிரியான பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு பயன்படுத்துவதால் அது சைபர் கிரைம் குற்றங்களுக்கு வழிகோலாக உள்ளது.

எனவே வேறு வேறு தளங்களில் உள்நுழைவதற்கு தனிதனிபாஸ்வேர்ட் அவசியம். மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது பாஸ்வேர்டுகளை மாற்றிக் கொள்வதன் மூலம் உங்களது இணையதளக் கணக்குகளின் பாதுகாப்பினை மேம்படுத்தலாம்.