சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Redmi Band 3 என்ற இந்த ஸ்மார்ட் பேண்ட் கையில் இருந்தால் உங்கள் அருகே ஒரு டாக்டர் இருப்பதற்கு சமம் என்று கூறப்படுகிறது.
1.47 இன்ச் அளவிலான செவ்வக வடிவ திரையை கொண்டுள்ள Redmi Band 3 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய சிறந்த காட்சி அனுபவத்தை வழங்குகிறது. இந்த பேண்ட் 18 நாட்கள் வரை பேட்டரி ஆயுளை கொண்டுள்ள இது, உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி பல முக்கிய தகவல்களை கண்காணிக்கும்.
குறிப்பாக இதய துடிப்பு, ரத்த ஆக்ஸிஜன் அளவு மற்றும் தூக்க சுழற்சி கண்காணிப்பு போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. மேலும் வாட்டர் புரூப் அம்சம் உள்ளதால் தண்ணீரில் விழுந்தாலும் பிரச்சனையில்லை
சீனாவில் இந்த Redmi Band 3 ஸ்மார்ட் பேண்ட் சுமார் ரூ. 1,900 விலையில் விற்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் பேண்ட் கருப்பு, பழுப்பு, அடர் சாம்பல், பச்சை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் என ஆறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
Redmi Band 3 172 x 320 பிக்சல்களை கொண்ட 1.47 இன்ச் செவ்வக ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 60Hz புதுப்பிப்பு வீதத்துடன் சிறந்த காட்சி தரம், 16.5 கிராம் எடையுடன் அமைந்துள்ளது.
இதய துடிப்பு, இரத்த ஆக்ஸிஜன் அளவு, மற்றும் ஸ்டெப் டிராக்கரின் மூலம் உடல்நல கண்காணிப்பை செய்வதோடு, தூக்க மற்றும் மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பையும் கொண்டுள்ளது. எனவே இதை வாங்கிவிட்டால் உங்கள் அருகே ஒரு டாக்டர் இருப்பதற்கு சமம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
